Home
Mobile

இறங்கி அடிச்ச ஹானர்.. 180MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 1டிபி மெமரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் புதிய ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் ஐபி68 ரேட்டிங், டெலிபோட்டோ கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் மேஜிக் 6 ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

ஹானர் மேஜிக் 6 ப்ரோ அம்சங்கள் (HONOR Magic6 Pro Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே குவாட்-கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (5000 nits peak brightness), டால்பி விஷன் (Dolby Vision), 19:69:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (19.69:9 Aspect Ratio), 4320ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (4320Hz PWM dimming), எச்டிஆர் பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

இறங்கி அடிச்ச ஹானர்.. 180MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa-Core Snapdragon 8 Gen 3 ) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி இதில் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக மேஜிக் யுஐ 8.0 (Magic UI 8.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி வைடு மெயின் கேமரா OmniVision OVH9000 + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 180எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (180MP Periscope Telephoto Camera) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 6 ப்ரோ மாடல். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளன இந்த கேமராக்கள். அதேபோல் இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா + 3டி டெப்த் கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த போனின் செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.

5600எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 66W வயர்லெஸ் ஹானர் சூப்பர்சார்ஜ் ஆதரவு உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை நில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறங்கி அடிச்ச ஹானர்.. 180MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எஃபெக்ட்ஸ் (DTS:X Ultra sound effects) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 256ஜிபி மெமரி ஹானர் மேஜிக் 6 ப்ரோ போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.67,695-ஆக உள்ளது. பின்பு இதன் 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.73,630 விலையிலும், 1டிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.78,320 விலையிலும் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Magic6 Pro with 180MP periscope telephoto Launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X