யாரு சாமி அவன்.. OLED டிஸ்பிளே.. 3D கேமரா.. 180MP பெரிஸ்கோப்.. 5600mAh பேட்டரி.. எந்த மாடல்?
மார்கெட் அதிரும் விதமாக 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 180 எம்பி பெரிஸ்கோப் கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, 80W சார்ஜிங், 5600mAh பேட்டரி போன்ற போன்ற ஒட்டுமொத்த பிரம்மாண்ட அம்சங்களுடன் ஹானர் மேஜிக்6 ப்ரோ (Honor Magic6 Pro) போன் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹானர் மேஜிக்6 ப்ரோ அம்சங்கள் (Honor Magic6 Pro Specifications): இந்த ஹானர் போனில் 6.8 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு குவாட் கர்வ்ட் ஓஎல்இடி (Quad-Curved OLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

அதோடு எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 4320Hz PWM டிம்மிங், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) கொண்ட ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 4என்எம் (Octa-Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் வருகிறது.
அதோடு மேஜிக் UI 8.0 சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனின் டிரிபிள் ரியர் கேமரா மார்கெட்டையே அதிர வைத்துள்ளது.
ஓம்னிவிஷன் ஓவிஎச்9000 (OmniVision OVH9000) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 180 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (Periscope Telephoto Camera) வருகிறது. இந்த கேமராவில் 2.5x ஆப்டிகல் ஜூம், 100x டிஜிட்டல் ஜூம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் கொண்ட கேமராவாகும். அதேபோல 50 எம்பி செல்பீ கேமராவானது, 3டி டெப்த் சப்போர்ட்டுடன் வருகிறது. அதோடு 3டி பேஸ் அன்லாக் (3D Face Unlock) மற்றும் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த ஹானர் மேஜிக்6 ப்ரோ போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்பிரிண்ட் சென்சார் கொண்டிருக்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) வருகின்றன. அதோடு டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X Ultra) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆகவே, ஆடியோ குவாலிட்டியில் அல்ட்ரா கிளியர் அவுட்புட்டை எதிர்பார்க்கலாம்.

இந்த ஹானர் போனில் 5600mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 80W வயர்டு சார்ஜிங் மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 8.9 மிமீ தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த போனின் கிளாஸ் வேரியண்ட் 229 கிராம் எடையும், லெதர் வேரியண்ட் 225 கிராம் எடையும் கொண்டுள்ளது.
இந்த போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி, வை-பை 7, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்றவை வருகின்றன. கிலியன் ஸ்னோவ் (Qilian Snow), சீ லேக் கிரீன் (Sea Lake Green), வீட் வேவ் கிரீன் (Wheat Wave Green), ஃப்ளோவிங் கிளவுட் பர்பிள் (Flowing Cloud Purple), வெல்வெட் பிளாக் (Velvet Black) ஆகிய கலர்கள் வருகின்றன.
இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.67,695ஆகவும், 16 ஜிபி ரேம் +512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.73,630ஆகவும் இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.78,320ஆக இருக்கிறது. சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒருசில மாதங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








