முரட்டு காம்பினேஷன்.. 7200mAh பேட்டரி, 200MP கேமரா, Snapdragon 8 Elite Gen 5 சிப்.. புது Honor போன்!
ஹானர் (Honor) நிறுவனம் அதன் அடுத்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஹானர் மேஜிக் வி6 (Honor Magic V6) ஸ்மாட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தெரிகிறது. எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்பாக இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட், பேட்டரி மற்றும் கேமரா செட்டப் உள்ளிட்ட முக்கிய விவரக்குறிப்புகள் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக லீக் செய்யப்பட்டுள்ளது.
ஹானர் மேஜிக் வி6 ஸ்மாட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது குவால்காமின் பிளாக்ஷிப் சிப்செட் ஆன ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் செல் பேட்டரி பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மொத்தமாக 6,900mAh வரையிலான திறனை வழங்கக்கூடும்.

மேலும் ஹானர் நிறுவனம் ஆனது 7200mAh பேட்டரியுடன் கூடிய மேஜிக் வி6 ஸ்மார்ட்போனின் மற்றொரு மாடலையும் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஒரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனுக்கு இவ்வளவு மிகப்பெரிய பேட்டரியை பேக் செய்யும் முதல் நிறுவனமாக ஹானர் இருக்கும்.
கேமராக்களை பொறுத்தவரை, ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 200 மெகாபிக்சல் பிரைமரி கேமரா பேக் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது முந்தைய லீக் விவரங்களுடன் ஒத்துப்போகிறது. மேலும் இதன் ரியர் கேமரா செட்டப்பில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் திறன்களை கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் இடம்பெறலாம். கடைசியாக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டிருக்கலாம்.
முன்னதாக அறிமுகமான ஹானர் மேஜிக் வி5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 7.95-இன்ச் ஒஎல்இடி மெயின் டிஸ்பிளே
- 6.45-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி அவுட்டர் டிஸ்பிளே
- ஆக்டாகோர் ஸ்னர்படிராகன் 8 எலைட் சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50எம்பி பிரைமரி கேமரா
- 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா
- 64எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 20எம்பி செல்பீ கேமரா
- 16ஜிபி வரை ரேம்
- 1டிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 5820mAh பேட்டரி
- 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50W வயர்லெஸ் சார்ஜிங்
- ஐபி59 ரேட்டிங்
ஹானர் மேஜிக் 8 லைட் (Honor Magic 8 Lite) ஸ்மார்ட்போனும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ்ஜிஸ் 5-ஸ்டார் விரிவான நம்பகத்தன்மை சான்றிதழ், ஐபி69கே நீர் எதிர்ப்பு திறன் மற்றும் ஹானர் நிறுவனத்தின் அல்ட்ரா-பவுன்ஸ் டிராப் எதிர்ப்பு கட்டுமானத்தை பெறுகிறது, இது 2.5 மீட்டர் வரையிலான ட்ராப்-ஐ தாங்கும் என்று ஹானர் கூறுகிறது.
மேலும் ஹானர் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஹானர் மேஜிக் 8லைட் ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.79-இன்ச் 1.5கே ஓஎல்இடி பேனலை கொண்டிருக்கும். இது எச்டிஆர் இல் 6000 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ்-ஐ வழங்கும் என்றும் ஹானர் கூறுகிறது. டிஸ்பிளேவின் பெஸல்கள் அனைத்து பக்கங்களிலும் 1.3 மிமீ மெலிதாக இருக்கும்.
சிப்செட்டை பொறுத்தவரை ஹானர் மேஜிக் 8 லைட் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் உடன் இயங்கும். இது 108எம்பி (1/1.67-இன்ச்) ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது OIS மற்றும் EIS ஆகிய இரண்டையும் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. இதோடு 5MP அல்ட்ராவைடு மற்றும் 16MP செல்பீ கேமரா உள்ளது, மேலும் போட்டோ ரிசல்ட்களை மேம்படுத்த AI செயலாக்க ஆதரவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை - ஹானர் மேஜிக் 8 லைட் ஸ்மார்ட்போனில் பேட்டரி தான் ஹைலைட்டே. இது 7500எம்ஏஎச் சிலிக்கான் கார்பன் செல்லை (7500mAh silicon carbon cell) பயன்படுத்துகிறது. ஹானர் நிறுவனத்தின் கூற்றுப்படி இது 3 நாட்கள் பேட்டரி லைஃப்பை வழங்கும். இது கோட்பாட்டளவில், இந்த ரேன்ஜில் நாம் வழக்கமாக காணும் கெப்பாசிட்டியை விட அதிகம் ஆகும்.


Click it and Unblock the Notifications








