சாம்ராஜ்யமே மிரளுது.. 8.8 மிமீ-க்குள் 6100mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. 50MP கேமரா.. 16GB ரேம்.. எந்த மாடல்?
ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படி 8.8 மிமீ தடிமன் கொண்ட ஃபோல்டபிள் மாடலாக ஹானர் மேஜிக் வி5 (HONOR Magic V5) களமிறங்க இருக்கிறது. இந்த தடிமனில் 6100mAh பேட்டரி மட்டுமல்லாமல், 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி டெலிபோட்டோ போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. இவ்வளவு கம்மியான தடிமனில் வெளியாகும் உலகின் முதல் போல்டபிள் மாடலாக ஹானர் மேஜிக் வி5 இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த போனில் எதிர்பார்க்கப்படும் பீச்சர்கள், வெளியீட்டு தேதி விவரங்கள் இதோ.
சீன மார்கெட்டில் ஜூலை 2ஆம் தேதி இந்த ஹானர் மேஜிக் வி5 ஃபோல்டபிள் போன் வெளியாக இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக டிசைன், கலர் மற்றும் ரேம் பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. கேமரா, டிஸ்பிளே, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. முதலில் அதிகாரப்பூர்வ பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஹானர் மேஜிக் வி5 அம்சங்கள் (HONOR Magic V5 Specifications): இந்த ஹானர் போனானது, போல்டு செய்த பிறகே 8.8 மிமீ தடிமன் கொடுக்கிறது. ஆகவே, அன்போல்டு செய்தால், பாதிக்குப்பாதி தடிமன் கம்மியாகவிடும். டெலிபோட்டோ கேமராவுடன டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்கள் மற்றும் 4 கலர்கள் இருக்கின்றன.
ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. வார்ம் ஒயிட் (Warm White), டவுன் கோல்டு (Dawn Gold), சில்க் ரோடு டன்ஹுவாங் (Silk Road Dunhuang) மற்றும் வெல்வெட் பிளாக் (Velvet Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
இந்த கலர்களில் அதிகாரப்பூர்வ போட்டோகளும் வெளியாகி இருக்கின்றன. இந்த ஹானர் மேஜிக் வி5 போனானது, உலகின் மெல்லிய மற்றும் எடை குறைவான ஃபோல்டபிள் மாடலாக வெளியாகும் என்று ஹானர் சிஇஓ ஜேம்ஸ் லீ (HONOR CEO James Li) உறுதி செய்துள்ளார். இப்போது, எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை தெரிந்த கொள்ளலாம்.

இந்த பீச்சர்கள் எக்ஸ் (X) தளத்தில் கசிந்தவை மட்டுமே. இந்த ஹானர் மேஜிக் வி5 போனில் 7.95 இன்ச் மெயின் டிஸ்பிளே மற்றும் 6.45 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வர இருக்கிறது. ஓஎல்இடி (OLED) அல்லது அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்படலாம். பிரீமியம் சிப்செட் கிடைக்க இருக்கிறது.
ஆகவே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் லீடிங் வெர்ஷன் (Snapdragon 8 Elite Leading Version) வர இருக்கிறது. இந்த ஹானர் மேஜிக் வி5 போனில் 6100mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் வர இருக்கிறது. ஆகவே, பெரிய டிஸ்பிளேவுக்கு ஏற்ப பேட்டரி பேக்கப் எதிர்பார்க்க முடிகிறது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் வர இருக்கிறது. வெளியிடூ நெருங்குவதால், அதிகாப்பூர்வ பீச்சர்கள் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








