Home
Mobile

மிரண்டு போன மார்க்கெட்.. 64எம்பி கேமரா.. 66W சார்ஜிங்.. புதிய Honor போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் ஹானர் மேஜிக் வி5 (HONOR Magic V5) எனும் போல்டபிள் போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய ஹானர் போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் மேஜிக் வி5 அம்சங்கள் (Honor Magic V5 Specifications): 7.95-இன்ச் ஒஎல்இடி (OLED) மெயின் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் மேஜிக் வி5 போன் வெளிவந்துள்ளது. மேலும் 6.45-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி ( LTPO OLED) அவுட்டர் டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிரண்டு போன மார்க்கெட்..புதிய Honor போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் ஸ்னர்படிராகன் 8 எலைட் எஸ்ஒசி (octa-core Snapdragon 8 Elite SoC) சிப்செட் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

மேஜிக்ஓஎஸ் 9.1(MagicOS 9.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் மேஜிக் வி5 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 64எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ( periscope telephoto lens) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் மேஜிக் வி5 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 217 கிராம் ஆகும்.

IP59 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஹானர் மேஜிக் வி5 போன் வெளிவந்துள்ளது. பின்பு 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. வெல்வெட் பிளாக், வார்ம் ஒயிட், கோல்ட் உள்ளிட்ட நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

5820mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் வி5 போன். பின்பு 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஹானர் மேஜிக் வி5 போனின் ஆரம்ப விலை CNY 8,999 (இந்திய மதிப்பில் ரூ.1,07,500) ஆக உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic V5 launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X