Home
Mobile

யாரு சாமி அவன்.. 64MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5820mAh பேட்டரி.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த குளோபல் மார்கெட்டும் மிரளும்படியான போல்டபிள் ஓஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம், 5820mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் ஹானர் மேஜிக் வி5 (HONOR Magic V5) ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் சிப்செட் கொண்ட இந்த போல்டபிள் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு அடுத்ததாக அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் போல்டபிள் ஸ்மார்ட்போன்களை ஹானர் நிறுவனம் களமிறக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே, சீன மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ஹானர் மேஜிக் வி5 போல்டபிள் ஸ்மார்ட்போனை இப்போது குளோபல் மார்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

யாரு சாமி அவன்.. 64MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த போல்டபிள் மாடல்களையும் தூக்கி சாப்பிடும்படி வெறும் 8.8 எம்எம் தடிமன் பாடி (ஐவரி ஒயிட்) இதில் வருகிறது. இது போல்டு செய்யும்போது கிடைக்கும் தடிமனாகும். அதுவே அல்போல்டு செய்தால், வெறும் 4.1 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல 217 கிராம் (ஐவரி ஒயிட்) எடை மட்டுமே இருக்கிறது. சிலிகான் கார்பன் பேட்டரி கிடைக்கிறது.

IP58 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP59 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மேலும், ஆன்டி-ஸ்க்ராட்ச் நானோகிரிஸ்டல் ஷீல்டு (Anti-scratch NanoCrystal Shield) புரொடெக்சன் கிடைக்கிறது. மெயின் டிஸ்பிளேவில் கார்பன் ஃபைபர் ரீஇன்போர்ஸ்டு (Carbon Fiber Reinforced) பில்ட் கிடைக்கிறது. ஆகவே, அதிக டியூரபிலிட்டி கிடைக்கும்.

ஹானர் மேஜிக் வி5 அம்சங்கள் (HONOR Magic V5 Specifications): இந்த போல்டபிள் ஸ்மார்ட்போனில் 7.95 இன்ச் (2352 x 2172 பிக்ச்கள்) ஓஎல்இடி (OLED) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், ஹானர் சூப்பர் ஆர்மர்டு புரொடெக்சன் கிடைக்கிறது.

இதே பீச்சர்களுடன் 6.43 இன்ச் (2376 x 1060 பிக்கல்கள்) ஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளே கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் மாடலாக இருப்பதால், அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

இந்த ஹானர் மேஜிக் வி5 போல்டபிள் ஸ்மார்ட்போனில் மேஜிக்ஓஎஸ் 9.0.1 (MagicOS 9.0.1) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி வைடு கேமரா + 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. வைடு மற்றும் டெலிபோட்டோவில் ஓஐஎஸ் கிடைக்கிறது.

இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங், 3X ஆப்டிகல் ஜூமிங், 100X டிஜிட்டல் ஜூமிங் போன்ற பிரீமியம் பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏஐ மோஷன் சென்சிங் கேப்ச்சர், ஏஐ போட்டோகிராபி, சூப்பர் வைடு ஆங்கிள் அப்பெர்சச்ர், மல்டி-வீடியோ, நைட் ஷாட் போன்ற கேமரா பீச்சர்களும் கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ கேமரா மெயின் டிஸ்பிளேவில் கிடைக்கிறது.

அதேபோல 20 எம்பி கேமரா அவுட்டர் டிஸ்பிளேவிலும் கிடைக்கிறது. 66W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5820mAh பேட்டரி வருகிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகியிருப்பதால், யுகே மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. அங்கு 1,999 யூரோவாக விலை உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.2,04,865ஆக விலை இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Magic V5 Foldable Smartphone With 16GB RAM Goes Global Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X