ஆகஸ்ட் 21-க்கு சம்பவம் உறுதி.. வருது புது ஃபிளிப் ஸ்மார்ட்போன்.. டிசைன், கலர் பின்னியெடுக்குது.. எந்த மாடல்?
சாம்சங், மோட்டோரோலா நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஃபிளிப் மாடல்களில் அதிகம் கவனம் செலுத்தும் ஹானர் நிறுவனமானது அதனுடைய ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 (HONOR Magic V Flip2) ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதி செய்துள்ளது. டிசைன் மற்றும் கலர் விவரங்களையும் உறுதி செய்துள்ளதால், ஃபிளிப் மாடல் பிரியர்கள் குஷியில் இருக்கின்றனர். இந்த ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 மாடலின் விவரங்களை இப்போது, தெரிந்து கொள்ளலாம்.
ஹானர் நிறுவனத்தின் மேஜிக் வி ஃபிளிப் மாடலானது சாம்சங் ஃபிளிப் மாடல்களைவிட மலிவான விலைக்கு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. 6.8 இன்ச் மெயின் ஓஎல்இடி டிஸ்பிளே, 4 இன்ச் அவுட்டர் ஓஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, 4800mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்தது.

இந்த பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியானது. இதனால் மார்கெட்டில் வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த ஜெனரேஷன் ரெடியாகிவிட்டது. ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 மாடலானது இப்போது வெளியீட்டுக்கு வர இருக்கிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. டிசைனும் உறுதியாகி இருக்கிறது.
இந்த ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 மாடலும் சாம்சங் நிறுவத்தின் மாடல்களுடன் ஒப்பிடுகையில் கம்மியான விலைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 4 கலர் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. இதில் கிளிட்டரிங் பேக் பேனல் கிடைக்கிறது. இந்த பேனலுடன் ப்ளூ கலர் வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், பர்பிள், ஒயிட் மற்றும் கிரே கலர்களும் இருக்கின்றன.
கேமரா டிசைன் மாற்றப்பட்டிருக்கிறது. மோட்டோரோலா ரேசர் 40 மாடல்களை போல இருக்கிறது. ஆனால், வெர்டிகலாக கேமரா பம்ப் கிடைக்கிறது. மெட்டாலிக் பினிஷிங் கொடுக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மார்கெட்டில் சில பீச்சர்கள் கசிந்து இருக்கின்றன. இதை இப்போது தெரிந்து கொள்ளலாம்,
ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 அம்சங்கள் (HONOR Magic V Flip2 Specifications): இந்த ஹானர் போனில் 6.8 இன்ச் (2520 x 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த ஃபிளிப் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. 4 இன்ச் அவுட்டர் ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இது கிட்டத்தட்ட முந்தைய மாடலை போலவே இருக்கலாம்.
ஆனால், பேட்டரி கேபாசிட்டி அதிகரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஏனென்றால், ஹானர் மேஜிக் வி ஃபிளிப் மாடலில் 4800mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே கிடைத்து. ஆனால், இதில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,500mAh பேட்டரி கிடைக்க இருப்பதாக பீச்சர்கள் கசிந்துள்ளன. ஆகவே, அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட ஃபிளிப் மாடலாக இருக்கலாம்.
அதேபோல ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 எஸ்ஓசி (Snapdragon 8s Gen 4 SoC) சிப்செட் கிடைக்க இருக்கிறது. இந்த சிப்செட் மூலம் தரமான பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்க முடியும். டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது. இதில் 50 எம்பி மெயின் கேமரா வருவது கிட்டத்தட்ட உறுதிதான். செகண்டரி கேமரா விவரங்கள் கசியவில்லை.
இந்த ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்க இருக்கிறது. ஹானர் மேஜிக் வி ஃபிளிப் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.57,595ஆக இருந்தது. ஆகவே, இந்த ஃபிளிப்2 மாடலை ரூ.60,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








