Home
Mobile

மெர்சல் காட்டும் Honor.. 200எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

ஹானர் நிறுவனம் தனது ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 (HONOR Magic V Flip2) மாடலை சீனாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 அம்சங்கள் (Honor Magic V Flip 2 Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி எல்டிபிஒ மெயின் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 போன். மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஅர் 10, டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut), 5000 நிட்ஸ் பிரைட்னஸ் எள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மெர்சல் காட்டும் Honor.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

அதேபோல் 4-இன்ச் ஒஎல்இடி எல்டிபிஒ கவர் டிஸ்பிளேவும் இந்த போனில் உள்ளது. இந்த கவர் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டிசிஐ-பி3 கலர் காமட்(DCI-P3 Color Gamut), 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும்.

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் உடன் இந்த புதிய போன்வெளிவந்துள்ளது. அதேபோல் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் யூனிட் இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும்.

மெர்சல் காட்டும் Honor.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

மேஜிக்ஓஎஸ் 9.0.1 (MagicOS 9.0.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியும் இந்த போனில் உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா இந்த போனில் உள்ளது. பின்பு இந்த போனில் மேக்ரோ ஆப்ஷன் கூட உள்ளது. அதேபோல் 4கே வீடியோ பதிவு ஆதரவை வழங்குகிறது ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), IP58 + IP59 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

மெர்சல் காட்டும் Honor.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

5500mAh பேட்டரி உடன் ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 7.5W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஹானர் மேஜிக் வி ஃபிளிப்2 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 5499 yuan (இந்திய மதிப்பில் ரூ.66,680) ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி சீனாவில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. பர்பிள், ஒயிட், கிரே நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic V Flip 2 launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X