Home
Mobile

ஒட்டுமொத்த மார்க்கெட்டும் மிரள போகுது.. 7000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் மேஜிக் 8 அல்ட்ரா (Honor Magic 8 Ultra) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஒஎல்இடி டிஸ்பிளே, 200எம்பி கேமரா, 7000mAh பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த ஹானர் மேஜிக் 8 அல்ட்ரா போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஹானர் மேஜிக் 8 அல்ட்ரா அம்சங்கள் (Honor Magic 8 Ultra Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) சிப்செட் உடன் ஹானர் மேஜிக் 8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஒட்டுமொத்த மார்க்கெட்டும் மிரள போகுது.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

6.7-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே டிஸ்பிளே ( 6.7-inch LTPO OLED display) வசதியுடன் ஹானர் மேஜிக் 8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

50எம்பி OV50R மெயின் கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + 200எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் மேஜிக் 8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஹானர் மேஜிக் 8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

7000mAh பேட்டரி வசதியுடன் ஹானர் மேஜிக் 8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) வசதியும் இந்த புதிய ஹானர் மேஜிக் 8 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஹானர் மேஜிக் 8 அல்ட்ரா போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic 8 Ultra specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X