ஜனவரி 19 இருக்கு Honor கச்சேரி.. சாட்டிலைட் கனெக்டிவிட்டி.. 7200mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் வரும் ஜனவரி 19-ம் தேதி சீனாவில் ஹானர் மேஜிக் 8 ஆர்எஸ்ஆர் (Honor Magic 8 RSR) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ஹானர் மேஜிக் 8 ஆர்எஸ்ஆர் அம்சங்கள் (Honor Magic 8 RSR Specifications): 6.71-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் குவாட்-கர்வ்டு டிசைன் (quad-curved design) கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. அதேபோல் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் ஹானர் மேஜிக் 8 ஆர்எஸ்ஆர் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகம் கொடுக்கிறது. அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ஹானர் மேஜிக் 8 ஆர்எஸ்ஆர் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேஜிக் 10 ஓஎஸ் (Magic 10 OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 200எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 8 ஆர்எஸ்ஆர் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது.
IP68, IP69, IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஹானர் மேஜிக் 8 ஆர்எஸ்ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் அல்ட்ராசோனிக் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( Ultrasonic In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.
7200mAh பேட்டரி உடன் ஹானர் மேஜிக் 8 ஆர்எஸ்ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
சாட்டிலைட் கனெக்டிவிட்டி சப்போர்ட் (satellite connectivity support), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட் பல சிறப்பான வசதிகள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








