Home
Mobile

இப்படியொரு போனுக்கு தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஹானர் மேஜிக் 8 ப்ரோ மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். அதாவது வரும் அக்டோபர் மாதம் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் ஹானர் மேஜிக் 8 ப்ரோ (Honor Magic 8 Pro) ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் மேஜிக் 8 ப்ரோ அம்சங்கள் (Honor Magic 8 Pro Specifications): 6.7-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஅர் 10, டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut), 5000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இப்படியொரு போனுக்கு தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் வசதி ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அனைத்து ஆப்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். பின்பு துல்லியமாகப் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன. குறிப்பாக IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அசத்தலான ஹானர் மேஜிக் 8 ப்ரோ போன் அறிமுகமாகும்.

7000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன். இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகள் ஹானர் மேஜிக் 8 ப்ரோ போனில் உள்ளன. பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor Magic 8 Pro to be launched with Snapdragon 8 Elite Gen 5: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X