Home
Mobile

மார்க்கெட் அதிரும் மாஸ்டர் பீஸ்.. 7200mAh பேட்டரி.. 200MP கேமரா.. அறிமுகமானது புதிய Honor போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக் 8 ப்ரோ (Honor Magic 8 Pro) ஸ்மார்ட்போனை தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹானர் மேஜிக் 8 ப்ரோ அம்சங்கள் (Honor Magic 8 Pro specifications): 6.71-இன்ச் 1.கே எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,256×2,808 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் வரையிலான எச்டிஆர் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மார்க்கெட் அதிரும் மாஸ்டர் பீஸ்..  அறிமுகமானது புதிய Honor போன்..

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC) உடன் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளன.

மேஜிக்ஓஎஸ் 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது.

50 மெகாபிக்சல் 1/1.3-இன்ச் ப்ரைமரி சென்சார் + 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 200 மெகாபிக்சல் 1/1.4-இன்ச் டெலிஃபோட்டோ கேமரா (எப்/2.6, 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது.

இதுதவிர AIMAGE ஹானர் நோக்ஸ் எஞ்சின் மற்றும் CIPA 5.5 இமேஜ் மற்றும் 3D டெப்த் சென்சார் ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங் கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதுவும் 7,200mA பேட்டரி உடன் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W (வயர்டு) மற்றும் 80W (வயர்லெஸ்) பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட் அதிரும் மாஸ்டர் பீஸ்..  அறிமுகமானது புதிய Honor போன்..

5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், கலிலியோ, க்ளோநாஸ், பைடு, என்எப்சி, ஓடிஜி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் 8 ப்ரோ போனின் விலை RM 4,599 (இந்திய மதிப்பில் ரூ.99,000)-ஆக உள்ளது. பின்பு இதன் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை RM 5,199 (இந்திய மதிப்பில் ரூ.1,12,000)-ஆக உள்ளது. பிளாக், சன்ரைஸ் கோல்ட் மற்றும் ஸ்கை சியான் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். தற்போது இந்த போன் மலேசியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic 8 Pro launched global: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X