Home
Mobile

2026 ஜனவரி களைகட்டுது.. 10080mAh பேட்டரி-ஐ தொடர்ந்து 5500mAh உடன் புதிய Air மாடல்.. HONOR டாப் கியர்ல போகுது!

ஹானர் (HONOR) நிறுவனமானது 2026 ஆம் ஆண்டு தொடங்கியதுமே டாப் கியர் போட்டு பறக்கிறது. வருகிற ஜனவரி 8 ஆம் தேதி அன்று டைமன்சிட்டி 8500 எலைட் மற்றும் ஒரு பெரிய 10,080mAh பேட்டரி கொண்ட ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது

இந்த முரட்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஹானர் நிறுவனம் இப்போது ஒரு புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் இந்த மாதமே அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Honor..10080mAh பேட்டரி-ஐ தொடர்ந்து 5500mAh உடன் புதிய Air மாடல்!

அது ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் (Honor Magic 8 Pro Air) ஸ்மார்ட்போன் ஆகும். ஹானர் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாத (2026 ஜனவரி) இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் நிறுவனத்தின் தலைவர் ஆன ஃபாங்ஃபீயின், இது குறித்து வெளியிட்ட பதிவில், குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் ஆனது "ப்ரோ" மற்றும் "ஏர்" என்கிற பிராண்டிங்கை கொண்டிருக்கும் என்கிறார். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ பெயர் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆக இது ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் அல்லது வெறுமனே ஹானர் மேஜிக் 8 ஏர் என்று அழைக்கப்படலாம்.

ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் எக்ஸ்பீரியன்ஸ் மோர் வழியாக கிடைத்த தகவலின்படி, ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போனானது மிகவும் மெல்லிய வடிவமைப்பைக் கொண்ட ஒரு சிறிய ஸ்மார்ட்போன் ஆக இருக்கும்.

இது 6.31-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும். முந்தைய லீக்ஸ்கள், இது அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்ட LTPO OLED 1.5K டிஸ்பிளேவாக இருக்கும் என்று பரிந்துரைக்கின்றன. சிப்செட்டை பொறுத்தவரை ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 9500 சிப்செட்டை கொண்டிருக்கலாம்.

ஸ்லிம் ஆன வடிவமைப்பை கொண்டிருக்கும் என்பதால், இது 80W பாஸ்ட்சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் இது மேஜிக் 8 சீரீஸ் ஸ்மார்ட்போனாக இருப்பதால், போட்டோகிராஃபி விஷயத்தில் நிச்சயம் ஏமாற்றமளிக்காது. கடைசியாக இது மேஜிக்ஓஎஸ் 10 கொண்டு இயங்கும் என்றும், நீடித்து உழைக்கும் தன்மைக்காக ஒரு மெட்டல் ஃபிரேமை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அறிமுகமான ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட மேஜிக்ஓஎஸ் 10
- 6.71-இன்ச் 1.5கே LTPO OLED டிஸ்பிளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் வரையிலான எச்டிஆர் பீக் ப்ரைட்னஸ்)
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை ரேம் மற்றும் 1TB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிப்பிள்ரியர் கேமரா யூனிட்
- 50 மெகாபிக்சல் 1/1.3-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 200 மெகாபிக்சல் 1/1.4-இன்ச் டெலிஃபோட்டோ கேமரா (எப்/2.6, 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம்)
- AIMAGE ஹானர் நோக்ஸ் எஞ்சின் மற்றும் CIPA 5.5 இமேஜ் ஸ்டெபிலைசேஷன்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 3D டெப்த் சென்சார்

- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்
- 5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், கலிலியோ, க்ளோநாஸ், பைடு, என்எப்சி, ஓடிஜி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 100W (வயர்டு) மற்றும் 80W (வயர்லெஸ்) பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,200mAh பேட்டரி
முன்னதாக அறிமுகமான ஹானர் மேஜிக் 8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே சாஃப்ட்வேர், செல்பீ கேமரா, ஐபி ரேட்டிங்ஸ், சிப்செட் மற்றும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள்
- 6.58-இன்ச் FHD+ டிஸ்பிளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் வரையிலான எச்டிஆர் பீக் ப்ரைட்னஸ்)
- அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்

- ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 50 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x வரை டிஜிட்டல் ஜூம் கொண்ட 64-மெகாபிக்சல் சூப்பர் நைட் காட் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் செல்பீ கேமரா
- 90W (வயர்டு) மற்றும் 80W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic 8 Pro Air With Ultra Thin Design 5500mAh Battery Tipped to launch As Soon As Possible
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X