Home
Mobile

மிரண்டு போன மார்க்கெட்.. IP69 ரேட்டிங்.. 64எம்பி கேமரா.. அறிமுகமானது புது HONOR 5ஜி போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் சீனாவில் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் (HONOR Magic 8 Pro Air) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் அம்சங்கள் (HONOR Magic 8 Pro Air Specifications): 6.31-இன்ச் 1.5கே எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் 10 பிளஸ், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஜெயண்ட் ரைனோ கிளாஸ் ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மிரண்டு போன மார்க்கெட்.. அறிமுகமானது புது HONOR 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa-Core Dimensity 9500 3nm) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர். மேலும் ஏஆர்எம் மாலி-ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali-G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

மேஜிக் யுஐ 10.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட கேமரா + 64எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் இந்த போனில் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்(3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட் பல அம்சங்கள் இந்த ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, கலிலியோ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மிரண்டு போன மார்க்கெட்.. அறிமுகமானது புது HONOR 5ஜி போன்.. எந்த மாடல்?

5500mAh பேட்டரி உடன் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு சூப்பர்சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 155 கிராம் ஆகும்.

ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் மாடலின் விலை 4999 yuan (இந்திய மதிப்பில் ரூ.65,205)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் மாடலின் விலை 5299 yuan (இந்திய மதிப்பில் ரூ.69,120)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் மாடலின் விலை 5599 yuan (இந்திய மதிப்பில் ரூ.73,030)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் மாடலின் விலை 5999 yuan (இந்திய மதிப்பில் ரூ.78,250)

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Magic 8 Pro Air with 5500mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X