Home
Mobile

இதுதான் புதிய Honor 5ஜி போன்.. 155 கிராம் எடை.. ஒஎல்இடி டிஸ்பிளே.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் (Honor Magic 8 Pro Air) எனும் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த மெல்லிய வடிவமைப்பு கொண்ட ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜனவரி 19-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

6.1 மிமீ என்கிற அளவிலான அல்ட்ரா-தின் டிசைன் மற்றும் 155 கிராம் எடையும் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மெல்லிய வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இதுதான் புதிய Honor 5ஜி போன்.. 155 கிராம் எடை.. எந்த மாடல்?

ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் அம்சங்கள் (Honor Magic 8 Pro Air Specifications): டைமன்சிட்டி 9500K சிப்செட் (Dimensity 9500k chipset) உடன் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்டபோன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

6.31-இன்ச் எல்டிபிஎஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (LTPS OLED display) உடன் இந்த புதிய ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் மாடல் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 200எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உடன் இந்த ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5500mAh பேட்டரி உடன் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

photo credits: Ice Universe, Honor

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic 8 Pro Air Launch Date Announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X