Lite இல்ல இது வெயிட்டு.. 3 நாள் நீடிக்கும் 7500mAh பேட்டரி.. மார்க்கெட்டை மிரட்டும் புது Honor போன்!
பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்கள் ஆனது நினைத்ததை விட வேகமாக பிரபலமாகி விட்டன. சில மாதங்களுக்கு முன்பு வரையிலாக 5000mAh பேட்டரி என்பது ஒரு நல்ல கெப்பாசிட்டி ஆக.. ஒரு நல்ல விற்பனை புள்ளியாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது 6000mAh கூட சின்ன பேட்டரியாகவே கருதப்படுகிறது.
7000mAh அல்லது அதற்கும் மேலான பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்கள் தான் - மொபைல் சந்தையில் சட்டென்ற கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் ஹானர் நிறுவனமோ பிக் பேட்டரி என்கிற டிரெண்டை மட்டுமே பிடித்து தொங்காமல்.. நீடித்து உழைக்கும் கட்டமைப்பையும் சேர்த்து - ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

அது ஹானர் மேஜிக் 8 லைட் (Honor Magic 8 Lite) ஸ்மார்ட்போன் ஆகும். மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, இது ஏற்கனவே சர்வதேச அளவில் அறிமுகமான ஹானர் மேஜிக் 8 ப்ரோ (Honor Magic 8 Pro) மாடலுடன் இணைகிறது.
ஹானர் மேஜிக் 8 லைட் ஸ்மார்ட்போனில் அப்படி என்ன நீடித்து உழைக்கும் கட்டமைப்பு உள்ளது? இந்த ஸ்மார்ட்போன் எஸ்ஜிஸ் 5-ஸ்டார் விரிவான நம்பகத்தன்மை சான்றிதழ், ஐபி69கே நீர் எதிர்ப்பு திறன் மற்றும் ஹானர் நிறுவனத்தின் அல்ட்ரா-பவுன்ஸ் டிராப் எதிர்ப்பு கட்டுமானத்தை பெறுகிறது, இது 2.5 மீட்டர் வரையிலான ட்ராப்-ஐ தாங்கும் என்று ஹானர் கூறுகிறது. ஒரு "லைட்" வெர்ஷனுக்கு இவ்வளவு நிறைய "உத்தரவாதம்"வாடிக்கையாளர்களை நிச்சயம் ஈர்க்கும்.
ஹானர் மேஜிக் 8 லைட் ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்: ஹானர் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஹானர் மேஜிக் 8லைட் ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.79-இன்ச் 1.5கே ஓஎல்இடி பேனலை கொண்டிருக்கும். இது எச்டிஆர் இல் 6000 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ்-ஐ வழங்கும் என்றும் ஹானர் கூறுகிறது. டிஸ்பிளேவின் பெஸல்கள் அனைத்து பக்கங்களிலும் 1.3 மிமீ மெலிதாக இருக்கும்.
சிப்செட்டை பொறுத்தவரை ஹானர் மேஜிக் 8 லைட் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் உடன் இயங்கும். இது 8 ஜிபி ரேம் மற்றும் தாராளமான 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3 கலரில் வருகிறது: ஃபாரஸ்ட் கிரீன், மிட்நைட் பிளாக் மற்றும் மிகவும் தனித்துவமான ரெட்டிஷ் பிரவுன்.
ஹானர் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா டிப்பார்ட்மென்ட்டிலும் "வெயிட்டை" சேர்த்துள்ளது. இது 108எம்பி (1/1.67-இன்ச்) ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது OIS மற்றும் EIS ஆகிய இரண்டையும் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. இதோடு 5MP அல்ட்ராவைடு மற்றும் 16MP செல்பீ கேமரா உள்ளது, மேலும் போட்டோ ரிசல்ட்களை மேம்படுத்த AI செயலாக்க ஆதரவும் உள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ஏஐ ஏரேசர், ஏஐ கட்அவுட் மற்றும் ஏஐ அவுட்பெயிண்டிங் எக்கோ ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் நீஹானர் மேஜிக் 8 லைட் ஸ்மார்ட்போனின் வழியாக நீங்கள் ஒரு புதிய 4கே மூவிங் போட்டோ கொலாஜையும் (4K moving photo collage) கைப்பற்றலாம்.
பேட்டரியை பொறுத்தவரை - ஹானர் மேஜிக் 8 லைட் ஸ்மார்ட்போனில் பேட்டரி தான் ஹைலைட்டே. இது 7500எம்ஏஎச் சிலிக்கான் கார்பன் செல்லை (7500mAh silicon carbon cell) பயன்படுத்துகிறது. ஹானர் நிறுவனத்தின் கூற்றுப்படி இது 3 நாட்கள் பேட்டரி லைஃப்பை வழங்கும். இது கோட்பாட்டளவில், இந்த ரேன்ஜில் நாம் வழக்கமாக காணும் கெப்பாசிட்டியை விட அதிகம் ஆகும்.
என்ன விலை? ஹானர் நிறுவனம் இன்னும் ஹானர் மேஜிக் 8 லைட் ஸ்மார்ட்போனின் இறுதி விலையை உறுதிப்படுத்தவில்லை. பெரும்பாலும் இது ரூ.50,000 க்குள் அல்லது அதை சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய அறிமுகம் குறித்தும் எந்த விவரங்களும் இல்லை. இது 2026 ஜனவரி மாத வாக்கில் விற்பனையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








