தம்பி ஐபோன் ஏர் கொஞ்சம் ஓரம்போ.. ஸ்லிம் டிசைனில் வருகிறது புது Honor போன்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
ஹானர் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஏர் மாடலுக்கு போட்டியாக ஹானர் மேஜிக் 8 ஏர் (Honor Magic 8 Air) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் ஆனது மெலிதான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்ச்ங்களை இப்போது பார்க்கலாம்.
ஹானர் மேஜிக் 8 ஏர் அம்சங்கள் (Honor Magic 8 Air specifications): 6.31-இன்ச் எல்டிபிஎஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (LTPS OLED display)உடன் இந்த புதிய ஹானர் மேஜிக் 8 ஏர் மாடல் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஹானர் மேஜிக் 8 ஏர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த புதிய ஹானர் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் சூப்பர் ஸ்லிம் வடிவமைப்பு ஆகும். அதாவது ஐபோன் ஏர் மாடலை விட குறைந்த எடையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த ஹானர் மேஜிக் 8 ஏர் போனில் பெரிய பேட்டரி வழங்கப்பட உள்ளது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் ஹானர் மேஜிக் 8 ஏர் ஸ்மார்டபோன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உடன் இந்த ஹானர் மேஜிக் 8 ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் 5500mAh பேட்டரி உடன் ஹானர் மேஜிக் 8 ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஹானர் மேஜிக் 8 ஏர் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, வரும் 2026 ஜனவரி மாதம் இந்த புதிய ஹானர் மேஜிக் 8 ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








