அக்டோபர் 30 உறுதி.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது புதிய Honor போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக் 7 ப்ரோ (Honor Magic 7 Pro) ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 30-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஹானர் மேஜிக் 7 ப்ரோ அம்சங்கள் (Honor Magic 7 Pro Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 எஸ்ஒஎசி (Snapdragon 8 Gen 4 SoC) சிப்செட் உடன் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அவாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்.

6.2-இன்ச் 2கே டூயல்-லேயர் ஒஎல்இடி (2K dual-layer OLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் (120Hz refresh rate), குன்லுன் கிளாஸ் பாதுகாப்பு (Kunlun Glass Protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
50எம்பி ஓம்னிவிஷன் ஓவி50எச் (OmniVision OV50H) பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி சாம்சங் ISOCELL HP3 சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி 3டி டெப்த் சென்சார் ((3D depth sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (ultrasonic fingerprint scanner) கொண்டுள்ளது இந்த போன்.
5800mAh பேட்டரி உடன் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஹானர் போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.

IP59 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது புது ஹானர் மேஜிக் 7 ப்ரோ போன். மேலும் MagicOS 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ஹானர் மேஜிக் 7 ப்ரோ விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும். மேலும் ஹானர் மேஜிக் 7 ப்ரோ போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








