Home
Mobile

இதுதான் புது Honor போன். 200MP கேமரா.. 5800mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. ஒஎல்இடி டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக் 7 ப்ரோ (Honor Magic 7 Pro) ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 30ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பாரக்கலாம்.

அதாவது இந்த புதிய ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனின் முன்புறம் டூயல் செல்பி கேமரா வசதியும் உள்ளது. பின்பு இந்த போன் 3டி பேஸ் அன்லாக் வசதிையை ஆதரக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதான் புது Honor போன். 200MP கேமரா.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஹானர் மேஜிக் 7 ப்ரோ அம்சங்கள் (Honor Magic 7 Pro Specifications): 1.5K டூயல்-லேயர் ஒஎல்இடி டிஸ்பிளே (dual-layer OLED display) உடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்,டால்பி விஷன் (Dolby Vision), bஎச்டிஆர் பிளஸ் ஆதரவு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (snapdragon 8 elite) சிப்செட் உடன் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். MagicOS 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி OmniVision OV50H சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி Samsung HP3 சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் 50எம்பி செல்பி கேமரா, 4கே வீடியோ பதிவு, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 2ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (ultrasonic in-screen fingerprint scanner) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

அதேபோல் 5800mAh பேட்டரியுடன் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போனின் பேட்டரி நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் புது Honor போன். 200MP கேமரா.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?

IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எஃபெக்ட்ஸ் (DTS:X Ultra sound effects) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ போன் வெளிவரும்.

மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் அறிமுகமாகும் குறிப்பாக அக்டோபர் 30ம் தேதி இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ போன் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு இந்தியா மற்றும் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

photo credit: gizmochina, m.weibo.cn, Digital Chat Station (DCS)

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic 7 Pro launch date and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X