மொத்த இந்தியாவும் வெயிட்டிங்.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது மிரட்டலான Honor போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் அடுத்து ஹானர் மேஜிக் 7 ப்ரோ (Honor Magic 7 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதவாவது வரும் நவம்பர் மாதம் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஹானர் மேஜிக் 7 ப்ரோ போனின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஹானர் மேஜிக் 7 ப்ரோ அம்சங்கள் (Honor Magic 7 Pro Specifications): 6.82-இன்ச்டிஸ்பிளே டூயல்-லேயர் ஒஎல்இடி டிஸ்பிளே (dual-layer OLED display) உடன் இந்த போன் அறிமுகமாகும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் பிளஸ் ஆதரவு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 (Snapdragon 8 Gen 4) சிப்செட் உடன் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
50எம்பி OmniVision OV50H சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி Samsung HP3 சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக 4கே வீடியோ பதிவு, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாமான ஸ்மார்ட்போன்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (ultrasonic in-screen fingerprint scanner) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
5800mAh டேப்டரியுடன் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போனின் பேட்டரி நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் மேஜிக் 7 ப்ரோ போனுக்கு IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எஃபெக்ட்ஸ் (DTS:X Ultra sound effects) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
Photo Credit: gizchina.in, Rodent950


Click it and Unblock the Notifications








