Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 200எம்பி கேமரா.. 100W சார்ஜிங்.. அறிமுகமானது புதிய ஹானர் போன்கள்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது ஹானர் மேஜிக் 7 ப்ரோ (HONOR Magic7 Pro) மற்றும் ஹானர் மேஜிக் 7 (HONOR Magic7) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 200எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்:

ஹானர் மேஜிக் 7 அம்சங்கள் (HONOR Magic7 Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் இந்த ஹானர் மேஜிக் 7 போன் வெளிவந்துள்ளது. மேலும் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், 4320Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (High Frequency PWM Dimming) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ஆயபைஉ ருஐ 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது.

மார்க்கெட்டே மிரள போகுது.. அறிமுகமானது புதிய ஹானர் போன்கள்..

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் மூலம் ஹானர் மேஜிக் 7 போன் இயங்குகிறது. பின்பு அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU), 5650எம்ஏஎச் பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங், அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic fingerprint sensor), IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதி கொண்டுள்ளது இந்த போன்.

50எம்பி வைடு மெயின் கேமரா ஓம்னிவிஷன் OVH9000 சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 7 போன். மேலும் 50எம்பி செல்பி கேமரா, 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 4கே வீடியோ பதிவு ஆதரவு, உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஹானர் மேஜிக் 7 ப்ரோ அம்சங்கள் (HONOR Magic7 Pro Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், 1280×2800 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 4320Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (High Frequency PWM Dimming) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன். மேலும் Magic UI 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்(Snapdragon 8 Elite chipset) மூலம் ஹானர் மேஜிக் 7 ப்ரோ போன் இயங்குகிறது. பின்பு அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU), 5850mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங், அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic fingerprint sensor), IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதி கொண்டுள்ளது இந்த போன்.

மார்க்கெட்டே மிரள போகுது.. அறிமுகமானது புதிய ஹானர் போன்கள்..

50எம்பி வைடு மெயின் கேமரா ஓம்னிவிஷன் OVH9000 சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ போன். மேலும் முன்பகுதியில் 50எம்பி கேமரா செல்பி கேமரா, 3டி டெப்த் கேமராக்கள் உள்ளன. பின்பு 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 4கே வீடியோ பதிவு ஆதரவு, உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஆனால் ஹானர் மேஜிக் 7 ப்ரோ மற்றும் ஹானர் மேஜிக் 7 போன்கள் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். ஹானர் மேஜிக் 7 ப்ரோ போனின் ஆரம்ப விலை ரூ.73,150-ஆக உள்ளது. பின்பு ஹானர் மேஜிக் 7 போனின் ஆரம்ப விலை ரூ.53,090-ஆக உள்ளது. மூன் ஷேடோ கிரே, ஸ்னோ ஒயிட், ஸ்கை ப்ளூ மற்றும் வெல்வெட் பிளாக் நிறங்களில் இந்த புதிய ஹானர் போன்களை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
honor magic 7 pro and Honor Magic 7 launched: check specifications price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X