Home
Mobile

அதிரவிடும் விலை.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது புதிய Honor போன்கள்.. எந்த மாடல்?

ஹானர் மேஜிக் 7 லைட் (Honor Magic 7 Lite), ஹானர் மேஜிக் 7 ப்ரோ (Honor Magic 7 pro) ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு போன்களும் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. அதாவது ஐரோப்பிய இணையதளத்தில் இந்த போன்களின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் 7 லைட் போனின விலை 376.89 euros(இந்திய மதிப்பில் ரூ.33,200)- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் 7 ப்ரோ போனின் விலை 1,225.90 euros (இந்திய மதிப்பில் ரூ.1,08,000)-ஆக உள்ளது.

அதிரவிடும் விலை.. வருகிறது புதிய ஹானர் போன்கள்.. எந்த மாடல்?

ஹானர் மேஜிக் 7 ப்ரோ அம்சங்கள் (Honor Magic 7 Pro specifications): 50எம்பி + 50எம்பி + 200எம்பி என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 6.8-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 5800mAh பேட்டரி, 100W சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஹானர் மேஜிக் 7 லைட் அம்சங்கள் (Honor Magic 7 Lite specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 எஸ்ஒசி(Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் உடன் ஹானர் மேஜிக் 7 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் ஹானர் மேஜிக் 7 லைட் போன் அறிமுகமாகும். மேலும் 2700 x 1224 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

புதிய ஹானர் மேஜிக் 7 லைட் போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இந்த ஹானர் மேஜிக் 7 லைட் போன் ஆனது 108எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதிரவிடும் விலை.. வருகிறது புதிய ஹானர் போன்கள்.. எந்த மாடல்?

அதேபோல் 6600mAh பேட்டரி உடன் ஹானர் மேஜிக் 7 லைட் போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. வைஃபை, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி, டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஹானர் மேஜிக் 7 லைட் போனில் உள்ளன.

மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 7 லைட் போன். டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் (dual stereo speakers) உடன் டால்பி அட்மாஸ் (Dolby Atmos)ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

photo credit: 91mobiles, fonearena, Honor

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic 7 Lite, Magic 7 Pro European Price Released: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X