அடுத்த ஹானர் போன் ரெடி.. 108எம்பி கேமரா.. 6600mAh பேட்டரி.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் அடுத்து ஹானர் மேஜிக் 7 லைட் (Honor Magic 7 Lite) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பிங்க் மற்றும் கிரே நிறங்களில் ஹானர் மேஜிக் 7 லைட் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹானர் மேஜிக் 7 லைட் அம்சங்கள் (Honor Magic 7 Lite specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் ஹானர் மேஜிக் 7 லைட் போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2700 x 1224 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 எஸ்ஒசி(Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் உடன் ஹானர் மேஜிக் 7 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய ஹானர் மேஜிக் 7 லைட் போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
108எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 7 லைட் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6600mAh பேட்டரி உடன் ஹானர் மேஜிக் 7 லைட் போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 7 லைட் போன். மேலும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் (dual stereo speakers) உடன் டால்பி அட்மாஸ் (Dolby Atmos)ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
வைஃபை, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி, டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஹானர் மேஜிக் 7 லைட் போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய ஹானர் போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credit: 91mobiles.com


Click it and Unblock the Notifications








