வேற சாய்ஸே வேணாம்.. 160MP பெரிஸ்கோப் ஜூம்.. 66W சார்ஜிங்..மிரட்டலான ஹானர் போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹானர் 90 ஸ்மார்ட்போனுக்கு அதிக வரவேற்பு இருந்தது. மேலும் இந்நிறுவனம் இந்தியாவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் ஹானர் நிறுவனம் ஹானர் மேஜிக் 6 எனும் ஸ்மார்ட்போனை வரும் வாரங்களில் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதன்பின்பு உலக சந்தை மற்றும் இந்தியச் சந்தையிலும் இந்த ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3C சான்றிதழ் தளத்தில் ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்ப்போம்.

அதாவது ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போன் ஆனது 160எம்பி பெரிஸ்கோப் ஜூம் கேமரா உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பெரிஸ்கோப் ஜூம் கேமரா உதவியுடன் தொலைவில் உள்ள பொருட்களை கூட துல்லியமாகப் படம் பிடிக்க முடியும். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போன்.
அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் மேஜிக் 6 சாதனம் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 மாடல். பின்பு இதில் 5100 எம்ஏஎச் பேட்டரி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் பெரிய டிஸ்பிளே, 256ஜிபி மெமரி, 16ஜிபி ரேம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் மேஜிக் 6 போன் அறிமுகமாகும்.
மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹானர் 90 போனின் அம்சங்களைப் பார்ப்போம். அதாவது ஹானர்90 போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 360Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) வருகிறது.

குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். இந்த ஹானர் 90 போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
ஹானர் 90 போனில் 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி (மேக்ரோ ஆப்சன்) டெப்த் லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. மேலும் இதில் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வருகிறது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) உடன் 2.5GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த ஹானர் 90 போன். மிங் பிரியர்களுக்காக அட்டகாசமான அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹானர் மாடல்களில் வரும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) இந்த போனில் உள்ளது.
இந்த ஹானர் 90 மாடலில் 66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக அமேசான் தளத்தில் இந்த ஹானர் 90 போனை ரூ.37,999 விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications