Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 180MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 1டிபி மெமரி.. வருகிறது புதிய ஹானர் போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது ஹானர் மேஜிக் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற இருக்கும் MWC 2024 நிகழ்வில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஹானர் மேஜிக் 6 மற்றும் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக ஹானர் மேஜிக் 6 சீரிஸ் (HONOR Magic 6 Series)ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் உலக சந்தையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் சமீபத்தில் ஆன்லைனில் வெளியான ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்க்கெட்டே அதிர போகுது.. புதிய ஹானர் போன்.. எந்த மாடல்?

ஹானர் மேஜிக் 6 ப்ரோ அம்சங்கள் (HONOR Magic 6 Pro specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa-Core Snapdragon 8 Gen 3 ) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் . குறிப்பாக மேஜிக் யுஐ 8.0(Magic UI 8.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். இருந்தபோதிலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே குவாட்-கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் உலக சந்தையில் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (5000 nits peak brightness), டால்பி விஷன் (Dolby Vision), 19:69:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (19.69:9 Aspect Ratio), 4320ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (4320Hz PWM dimming), எச்டிஆர் பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.

இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ மாடல் 50எம்பி வைடு மெயின் கேமரா OmniVision OVH9000 + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 180எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (180MP Periscope Telephoto Camera) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளன இந்த கேமராக்கள். அதேபோல் இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா + 3டி டெப்த் கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். இந்த போனின் செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐீ68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

மார்க்கெட்டே அதிர போகுது.. புதிய ஹானர் போன்.. எந்த மாடல்?

5600எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் உலக சந்தையில் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 66W வயர்லெஸ் ஹானர் சூப்பர்சார்ஜ் ஆதரவு உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை நில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எஃபெக்ட்ஸ் (DTS:X Ultra sound effects) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக ஹானர் மேஜிக் 6 ப்ரோ மாடல் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Magic 6 Series will be launched on February 25th at MWC event: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X