ஆரம்பிக்கலாங்களா.. 180MP கேமரா.. 80W சார்ஜிங்.. 24GB ரேம்.. இந்தியாவுக்கு வரும் ஹானர் போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் ஹானர் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் ஒரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் ஹானர் மேஜிக் 6 ஆர்எஸ்ஆர் (HONOR Magic6 RSR) அல்லது ஹானர் மேஜிக் 6 அல்டிமேட் எடிஷன் (HONOR Magic6 Ultimate Edition) ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. HTech இன் CEO மாதவ் சேத் கூட இந்த ஹானர் போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஹானர் மேஜிக் 6 ஆர்எஸ்ஆர் அல்லது ஹானர் மேஜிக் 6 அல்டிமேட் போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஹானர் மேஜிக் 6 ஆர்எஸ்ஆர் போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஹானர் மேஜிக் 6 ஆர்எஸ்ஆர் அம்சங்கள் (HONOR Magic 6 RSR specifications): 6.8-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே (LTPO OLED display) வசதியுடன் ஹானர் மேஜிக் 6 ஆர்எஸ்ஆர் அறிமுகம் செய்யப்படும். பின்பு 1280×2800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர், டால்பி விஷன், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 5000 நிட்ஸ் எச்டிஆர் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

50எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 180எம்பி டெலிபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 6 ஆர்எஸ்ஆர் போன். குறிப்பாக 100x டிஜிட்டல் ஜூம், 4கே வீடியோ பதிவு, ஆட்டோஃபோகஸ், லிடார் அரே ஃபோகசிங் சிஸ்டம் (Lidar array focusing system) போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த போனின் ரியர் கேமராக்கள்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி + 3டி டெப்த் டூயல் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 ஆர்எஸ்ஆர் போன். குறிப்பாக இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். குறிப்பாக 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் போன் விற்பனைக்கு வரும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) வசதி இந்த ஹானர் மேஜிக் 6 ஆர்எஸ்ஆர் ஸமார்ட்போனில் உள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஹானர் போனை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக 5600எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 ஆர்எஸ்ஆர் போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 66 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. சீனாவில் இந்த போன் CNY 6,999(இந்திய மதிப்பில் ரூ.81,837) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவிலும் ஹானர் மேஜிக் 6 ஆர்எஸ்ஆர் போன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications