அதிரவிடும் விலை.. 180MP கேமரா.. 80W சார்ஜிங்.. 512GB மெமரி.. இந்தியாவுக்கு வந்த Honor போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது ஹானர் மேஜிக் 6 ப்ரோ (HONOR Magic6 Pro) போனை இன்று (ஆகஸ்ட் 2) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் 180எம்பி கேமரா, 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பன அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் மேஜிக் 6 ப்ரோ போனின் விலை, அம்சங்கள், விற்பனை தேதி போன்ற அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹானர் மேஜிக் 6 ப்ரோ அம்சங்கள் (HONOR Magic6 Pro Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே குவாட்-கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (5000 nits peak brightness), டால்பி விஷன் (Dolby Vision), 19:69:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (19.69:9 Aspect Ratio), 4320ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (4320Hz PWM dimming), எச்டிஆர் பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa-Core Snapdragon 8 Gen 3 ) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி உடன் விற்பனைக்கு வரும் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக மேஜிக் யுஐ 8.0 (Magic UI 8.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி வைடு மெயின் கேமரா OmniVision OVH9000 + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 180எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (180MP Periscope Telephoto Camera) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 6 ப்ரோ மாடல். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளன இந்த கேமராக்கள். அதேபோல் இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா + 3டி டெப்த் கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த போனின் செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.
5600எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 66W வயர்லெஸ் ஹானர் சூப்பர்சார்ஜ் ஆதரவு உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை நில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எஃபெக்ட்ஸ் (DTS:X Ultra sound effects) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.
பிளாக் மற்றும் எபி கிரீன் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் ஹானர் மேஜிக் 6 ப்ரோ போனின் விலை ரூ.89,999-ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக 180 நாட்களுக்கு இந்த போனின் விலை குறையாது என ஹானர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








