மார்க்கெட்டே திணறப்போகுது.. 180MP கேமரா.. 80W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. புதிய ஹானர் போன் ரெடி.. எந்த மாடல்?
கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இப்போது இந்த போனின் அம்சங்கள் மற்றும் அறிமுக தேதி குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஹானர் மேஜிக் 6 ப்ரோ அம்சங்கள் (HONOR Magic6 Pro specifications) : சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa-Core Snapdragon 8 Gen 3 ) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

மேஜிக் யுஐ 8.0 (Magic UI 8.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்.
ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே குவாட்-கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (5000 nits peak brightness), டால்பி விஷன் (Dolby Vision), 19:69:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (19.69:9 Aspect Ratio), 4320ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (4320Hz PWM dimming), எச்டிஆர் பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
அதேபோல் 50எம்பி வைடு மெயின் கேமரா OmniVision OVH9000 + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 180எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (180MP Periscope Telephoto Camera) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 6 ப்ரோ மாடல். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளன இந்த கேமராக்கள். இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா + 3டி டெப்த் கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இந்த போனின் செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
5600எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 66W வயர்லெஸ் ஹானர் சூப்பர்சார்ஜ் ஆதரவு உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எஃபெக்ட்ஸ் (DTS:X Ultra sound effects) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன.
எப்போது அறிமுகம்? பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC) இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ அறிமுகம் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த போன் முதலில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு வரும் மாதங்களில் இந்தியாவில் ஹானர் மேஜிக் 6 ப்ரோ அறிமுகமாகும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








