ஆகஸ்ட் 2 உறுதி.. 180MP கேமரா.. OLED டிஸ்பிளே.. இந்தியாவுக்கு வரும் Honor போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் புதிய ஹானர் மேஜிக் 6 ப்ரோ (HONOR Magic6 Pro) ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 180எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். ஏற்கனவே இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஹானர் மேஜிக் 6 ப்ரோ அம்சங்கள் (HONOR Magic6 Pro Specifications):6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே குவாட்-கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (5000 nits peak brightness), டால்பி விஷன் (Dolby Vision), 19:69:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (19.69:9 Aspect Ratio), 4320ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (4320Hz PWM dimming), எச்டிஆர் பிளஸ் ஆதரவு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa-Core Snapdragon 8 Gen 3 ) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. மேலும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி இதில் பயன்படுத்தலாம்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக மேஜிக் யுஐ 8.0 (Magic UI 8.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி வைடு மெயின் கேமரா OmniVision OVH9000 + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 180எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (180MP Periscope Telephoto Camera) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 6 ப்ரோ மாடல். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளன இந்த கேமராக்கள். அதேபோல் இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா + 3டி டெப்த் கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இந்த போனின் செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.
டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எஃபெக்ட்ஸ் (DTS:X Ultra sound effects) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக ஃபேஸ் அன்லாக் வசதி இதில் உள்ளது.

5600எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 66W வயர்லெஸ் ஹானர் சூப்பர்சார்ஜ் ஆதரவு உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை நில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.67,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சற்று உயர்வான விலையில் வெளிவந்தாலும் அனைத்து சிறப்பு அம்சங்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








