முரட்டு போனை களமிறக்கும் Honor.. 180MP கேமரா.. 80W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?
ஹானர் நிறுவனம் இன்று ஹானர் 200 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஹானர் 200 சீரிஸ் போன்களுக்கு அடுத்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ (HONOR Magic 6 Pro) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது தற்பேது BIS சான்றிதழைப் பெற்றுள்ளது ஹானர் மேஜிக் 6 ப்ரோ. எனவே வரும் வாரங்களில் இந்த புதிய ஹானர் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
BIS சான்றிதழ் தளத்தில் BVL-N49 என்ற மாடல் நம்பர் உடன் ஹானர் மேஜிக் 6 ப்ரோ காணப்பட்டுள்ளது. மேலும் தனித்துவமான வடிவமைப்பு, ஸ்னாப்டிராகன் சிப்செட், 180எம்பி கேமரா, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹானர் போன் வெளிவரும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் மேஜிக் 6 ப்ரோ அம்சங்கள் (HONOR Magic 6 Pro Specifications): தரமான ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa-Core Snapdragon 8 Gen 3 ) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதில் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே குவாட்-கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (5000 nits peak brightness), டால்பி விஷன் (Dolby Vision), 19:69:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (19.69:9 Aspect Ratio), 4320ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (4320Hz PWM dimming), எச்டிஆர் பிளஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ போன் ஆனது 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் . அதேபோல் மேஜிக் யுஐ 8.0 (Magic UI 8.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) மூலம் இந்த போன் இயங்குகிறது.
50எம்பி வைடு மெயின் கேமரா OmniVision OVH9000 + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 180எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (180MP Periscope Telephoto Camera) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்பட் கொண்டுள்ளது இந்த போன். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இதில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது.
செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா + 3டி டெப்த் கேமரா என்கிற டூயல் செல்பி கேமராக்கள் உள்ளன. அதேபோல் இந்த போனின் செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். மேலும் இந்த போனில் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.
தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் இந்த போன். அதாவது டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எஃபெக்ட்ஸ் (DTS:X Ultra sound effects) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி இதில் உள்ளன.

5600எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதுதவிர 66 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் ஹானர் மேஜிக் 6 ப்ரோ போனில் உள்ளது.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.67,000 பட்ஜெட்டில் வெளிவரும். இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஹானர் மேஜிக் 6 ப்ரோ போன்.


Click it and Unblock the Notifications








