கேமரா அசுரன்.. 80W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. 180MP கேமரா.. இந்தியாவுக்கு வரும் புதிய Honor போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் புதிய ஹானர் மேஜிக் 6 ப்ரோ (Honor Magic 6 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது சமீபத்தில் ஹானர் நிறுவனத்தின் சிஇஒ மாதவ் சேத் (Madhav Sheth) வெளியிட்ட டீசரில் இந்த போனின் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது, விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஹானர் மேஜிக் 6 ப்ரோ அம்சங்கள் (HONOR Magic6 Pro Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே குவாட்-கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே இந்த போனில் உள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision), 19:69:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (19.69:9 Aspect Ratio), 4320ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (4320Hz PWM dimming), எச்டிஆர் பிளஸ் ஆதரவு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
தரமான ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa-Core Snapdragon 8 Gen 3 ) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் மேஜிக் 6 ப்ரோ போன். அதேபோல் மேஜிக் யுஐ 8.0 (Magic UI 8.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.
ஹானர் மேஜிக் 6 ப்ரோ போனில் 50எம்பி வைடு மெயின் கேமரா OmniVision OVH9000 + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 180எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (180MP Periscope Telephoto Camera) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளன இந்த கேமராக்கள். இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா + 3டி டெப்த் கேமரா உள்ளன. குறிப்பாக இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். பின்பு இந்த போனுக்கு IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது.
5600எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 66W வயர்லெஸ் ஹானர் சூப்பர்சார்ஜ் ஆதரவு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

இந்த ஹானர் போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதாவது டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எஃபெக்ட்ஸ்(DTS:X Ultra sound effects) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. பின்பு ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளன. ஆனால் இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். அதாவது இந்தியாவில் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஆனது ரூ.67,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








