Home
Mobile

அதிரும் மார்க்கெட்.. 100W சார்ஜிங்..1-இன்ச் கேமரா.. 512GB மெமரி.. மிரட்டலான ஹானர் போன் ரெடி.. எந்த மாடல்?

ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். அதேபோல் இந்த போன் உலக சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ஹானர் மேஜிக் 6 ப்ரோ அம்சங்கள் (Honor Magic 6 Pro Specifications): அதாவது ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சாட்டிலைட் கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இதுபோன்ற புதிய தொழில்நுட்ப வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு தான் அதிக வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரும் மார்க்கெட்..  மிரட்டலான ஹானர் போன் ரெடி.. எந்த மாடல்?

ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்.

அதேபோல் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

1-இன்ச் OV50K பிரைமரி சென்சார் உட்பட மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் மேஜிக் 6 ப்ரோ போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

அதிரும் மார்க்கெட்..  மிரட்டலான ஹானர் போன் ரெடி.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனில் தரமான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic 6 Pro Camera Specifications Leaked Online: check all details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X