Home
Mobile

மிரண்டு போவீங்க.. 108எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது ஹானர் மேஜிக் 6 லைட்..

ஹானர் நிறுவனம் ஹானர் மேஜிக் 6 லைட் எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதுவும் ஹானர் மேஜிக் 6 லைட் போன் ஆனது கூகுள் பிளே ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதாவது ஹானர் எக்ஸ்9பி எனும் ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதே ஹானர் எக்ஸ்9பி (Honor X9b) ஸ்மார்ட்போன் தான் ஹானர் மேஜிக் 6 லைட் (Honor Magic 6 Lite) எனும் பெயரில் ஐரோப்பாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட உள்ளது. அதேபோல் இந்த ஹானர் மேஜிக் 6 லைட் ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

108எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது ஹானர் மேஜிக் 6 லைட்..

இப்போது ஹானர் எக்ஸ்9பி (ஹானர் மேஜிக் 6 லைட்) ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். மேலும் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும் இந்த போன்.

இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் எக்ஸ்9பி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

இந்த ஹானர் எக்ஸ்9பி போன் 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஹானர் போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் மேஜிக் ஓஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

108எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது ஹானர் மேஜிக் 6 லைட்..

5800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஹானர் எக்ஸ்9பி போன் வெளிவந்துள்ளது

மிட்நைட் பிளாக், எமரால்டு க்ரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புது ஹானர் போன். இதுதவிர வேகன் லெதர் பேக் டிசைன் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஹானர் எக்ஸ்9பி போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic 6 Lite will be launched soon: check all details here Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X