அழகு அள்ளுதே.. 108MP கேமரா.. 35W சார்ஜிங்.. 256GB மெமரி.. அறிமுகமானது ஹானர் போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் ஹானர் மேஜிக் 6 லைட் எனும் ஸ்மார்ட்போனை தற்போது இத்தாலியில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஹானர் மேஜிக் 6 லைட் போன் கூடிய விரைவில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
ஹானர் மேஜிக் 6 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா, பன்ச் ஹோல் டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. இப்போது ஹானர் மேஜிக் 6 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் மேஜிக் 6 லைட் அம்சங்கள் (Honor Magic 6 Lite Specifications): 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 லைட் ஸ்மார்ட்போன். மேலும் 92.8% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2652 x 1200 பிக்சல்ஸ், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. மேலும் உங்கள் கண்களைப் பாதுகாக்க 1920Hz PWM டிம்மிங் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் போன்.
ஹானர் மேஜிக் 6 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியு உள்ளது. எனவே இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். இதுதவிர அட்ரினோ 710 ஜிபியு(Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 லைட் போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த ஹானர் மேஜிக் 6 லைட் போன் வெளிவந்துள்ளது.
மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேஜிக் ஓஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 லைட் போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
5300 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹானர் மேஜிக் 6 லைட்ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 35 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மிட்நைட் பிளாக், எமரால்டு கிரீன், சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

5ஜி, டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஹானர் மேஜிக் 6 லைட் போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் எடை 185 கிராம் ஆகும். தற்போது வரை இந்த போனின் விலை வெளியிடப்படவில்லை.
ஆனாலும் விரைவில் இந்த போனின் விலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வரும் டிசம்பர் 27-ம் தேதி தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் இந்த ஹானர் மேஜிக் 6 லைட் போன் விற்பனைக்கு வரும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








