Home
Mobile

அசத்தலான சிப்செட் உடன் ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் பிரான்சில் புதிய ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, தரமான சிப்செட் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் மேஜிக் 4 லைட்

ஹானர் மேஜிக் 4 லைட் 6.81-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 1,080x2,388 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த
ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனி

இந்த ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனில்

ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சாதனத்தைபயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த ஹானர் மேஜிக் 4 லைட்
ஸ்மார்ட்போன்.

ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனில்

புதிய ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.

மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனில் 4800

ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 66 வாட் பாஸ்ட் சர்ரஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மேஜிக்

ஹானர் மேஜிக் 4 லைட் ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.1, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.23,400-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor Magic 4 Lite With Snapdragon 695 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X