கேமராவையே தூக்கி சாப்பிடும்போல- மூன்று 64 எம்பி கேமரா- தூள் பறக்கும் ஹானர் மேஜிக் 3 சீரிஸ் அறிமுகம்!

|

குவால்காம் எஸ்ஓசி வசதியுடன் ஹானர் மேஜிக் 3 சீரிஸ் தொடங்கப்பட்டுள்ளது. ஹானர் மேஜிக் 3 தொடர் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது. ஹானர் மேஜிக் 3 தொடரில் மூன்று சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. ஹானர் நிறுவனத்தின் புதிய சாதனமான ஹானர் மேஜிக் 3 தொடரின் மூன்று மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை ஹானர் மேஜிக் 3, ஹானர் மேஜிக் 3 ப்ரோ மற்றும் ஹானர் மேஜிக் 3 ப்ரோ+ சாதனமாகும். இந்த சாதனங்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹானர் மேஜிக் 3 சீரிஸ் 5ஜி ஆதரவோடு வருகிறது.

ஹானர் மேஜிக் 3 விலை

ஹானர் மேஜிக் 3 விலை

ஹானர் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.52,800 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை இந்திய மதிப்புப்படி ரூ.57,300 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரைட் பிளாக், டான் ப்ளூ, க்ளேஸ் ஒயிட் மற்றும் கோல்ட் ஆகிய நிறங்களில் வருகிறது.

ஹானர் மேஜிக் 3 ப்ரோ சாதனத்தின் விலை

ஹானர் மேஜிக் 3 ப்ரோ சாதனத்தின் விலை

ஹானர் மேஜிக் 3 ப்ரோ சாதனத்தின் விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை இந்திய மதிப்புப்படி ரூ.68,800 ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.72,300 ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மாடல் விலை ரூ.78,000 ஆக இருக்கிறது. இது பிரைட் வைட், க்ளேஸ் வைட் மற்றும் கோல்ட் வண்ண விருப்பங்களில் வருகிறது.

ஹானர் மேஜிக் 3 ப்ரோ+ விலை

ஹானர் மேஜிக் 3 ப்ரோ+ விலை

ஹானர் மேஜிக் 3 ப்ரோ+ சாதனமானது பிரைட் பிளாக் மற்றும் க்ளேஸ் ஒயிட் நிறங்களில் வருகிறது. இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மாடல் விலை இந்திய மதிப்புப்படி ரூ.91,800 ஆக இருக்கிறது. இது பிரைட் பிளாக் மற்றும் க்ளேஸ் வைட் வண்ண விருப்பங்களில் வருகிறது.

முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கின்றன

முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கின்றன

இந்த மூன்று மாடல்களும் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போது சீனாவில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கின்றன. இவை ஆகஸ்ட் 20முதல் அந்த நாட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஹானர் மேஜிக் 3 தொடர் சர்வதேச சந்தையில் கிடைக்கும் தன்மை குறித்து நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.

ஹானர் மேஜிக் 3 சிறப்பம்சங்கள்

ஹானர் மேஜிக் 3 சிறப்பம்சங்கள்

ஹானர் மேஜிக் 3 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாக கொண்ட மேஜிக் யுஐ 5.0 மூலம் இயக்கப்படுகிறது. இது 6.76 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதமும் ஹூட்டின் கீழ் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இது இயக்கப்படுகிறது.

இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. அது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 64 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் வருகிறது. முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டூயல் பேண்ட் வைஃபை, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் 4600 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

ஹானர் மேஜிக் 3 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஹானர் மேஜிக் 3 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஹானர் மேஜிக் 3 ப்ரோ ஏணைய சிறப்பம்சங்கள் மற்றும் மேம்படுத்தல் ஆதரவோடு வருகிறது. ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 ப்ளஸ் எஸ்ஓசி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை உள்சேமிப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 64 எம்பி மோனோக்ரோம் கேமரா மற்றும் 64 எம்பி சென்சார் உடன் வருகிறது. இந்க ல்மார்ட்போன் 4600 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இது 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஐபி 68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு அம்சத்தோடு இது வருகிறது.

ஹானர் மேஜிக் 3 ப்ரோ+ சிறப்பம்சங்கள்

ஹானர் மேஜிக் 3 ப்ரோ+ சிறப்பம்சங்கள்

ஹானர் மேஜிக் 3 ப்ரோ ப்ளஸ் சாதனமானது ப்ரோ மாடலின் அதே விவரக்குறிப்புகளை கொண்டுள்ளது. கேமரா அம்சத்தில் மேம்பாடு அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் வைட் லென்ஸ், 64 மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 64 மெகாபிக்சல் மோனோக்ரோம் மற்றும் 64 மெகாபிக்சல் ஆப்டிகல் ஜூம் கேமரா அம்சத்தோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor Magic 3 Series Smartphone Launched with 12GB RAM, 66W Fast Charging and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X