ஹானர் மேஜிக் 2 அறிமுகம்: ஸ்லைடர் உடன் கூடிய 3 கேமரா கொண்ட ஸ்மார்ட் போன்.!
ஹுவாய் நிறுவனத்தின் அடுத்த புது மாடல் ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட் போன் அக்டோபர் 31 ஆம் தேதி அறிமுகம்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹுவாய் நிறுவனத்தின் அடுத்த புது மாடல் ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட் போன் அக்டோபர் 31 ஆம் தேதி அறிமுகம்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட் போன் பற்றிய பல லீக்கள் வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதிலும் இந்த புதிய ஸ்மார்ட் போன் ஆள்- ஸ்கிரீன் ஸ்மார்ட் போன் என்றும் இதில் ஸ்லைடர் உடன் அறிமுகம் செய்யப்படுமென்றும் பல லீக்கள் வெளியாகின.

ஹானர் மேஜிக் 2
இதனைத் தொடர்ந்து தற்பொழுது, ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட் போன் இன் உண்மையான புகைப்படங்களை அந்நிறுவனமே தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் டீஸர் உடன் பகிர்ந்துள்ளது. வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஹானர் மேஜிக் 2 இன் ப்ளூ மற்றும் பிங்க் பர்பிள் கலர் வேரியண்ட் இடம்பெற்றுள்ளது.

மூன்று கேமரா
ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட் போன் இன் மாடல் அப்படியே நமக்கு ஹுவாய் பி20 ஸ்மார்ட் போன்னை நினைவுபடுத்துகிறது. இந்த ஸ்மார்ட் போன் இன் பின் புறம் மூன்று கேமராகள் நேர்கோட்டில் அமைந்துள்ளது.

100% முழு திரை
இத்துடன் ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட் போன் நாட்ச் இல்லாத முழு ஸ்கிரீன் லுக் உடன் களமிறங்கவுள்ளது. 100% முழு திரை கொண்ட முதல் ஹானர் ஸ்மார்ட் போன்னாக, முன் செல்பி கேமராகள் ஸ்லைடர் இல் பொறுத்தப்பட்டுளள்து. இதில் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளதா அல்லது 3டி பேஸ் அலோக் சேவைக்கு அதுமுள்ளதா என்பது அக்டோபர் 31 ஆம் தேதி தெரியும்.

ஹானர் மேஜிக் 2 சிறப்பம்சங்கள்:
- 6.4' இன்ச் முழு எச்.டி பிளஸ் நாட்ச்லெஸ் டிஸ்பிளே
- கிரீன் 980 சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு
- 3,400 எம்.ஏ.எச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
- 16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 24 மெகா பிக்சல் பிளாக் & வைட் கேமரா
- 16 மெகா பிக்சல் டெலிபோட்டோ கேமரா


Click it and Unblock the Notifications