HD+ டிஸ்ப்ளே, 50எம்பி கேமரா உடன் அறிமுகமான Honor X6.. மிக மலிவு விலை

|

ஹானர் நிறுவனம் தொடர்ந்து வெவ்வேறு விலைப்பிரிவில் புதுப்புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

5,000mAh பேட்டரி, 50MP டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் பிற சக்தி வாய்ந்த அம்சங்களுடன் ஹானர் X6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Honor X6 அம்சங்கள்

Honor X6 அம்சங்கள்

Honor X6 ஸ்மார்ட்போனானது 720 x 1600 பிக்சல்கள் HD+ தீர்மானத்துடன் கூடிய 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே காட்சி 60Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என புதிய ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட்

Honor X6 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

புதிய ஹானர் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான மேஜிக் யுஐ 6.1 கஸ்டம் ஸ்கின் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

50MP முதன்மை கேமரா

50MP முதன்மை கேமரா

Honor X6 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் பின்புறத்தில் 50MP முதன்மை கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இரண்டாம் நிலை கேமராவாக 2 எம்பி மேக்ரோ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த அம்சங்களை வைத்தே கணித்துவிடலாம் இதன் விலை என்னவாக இருக்கும் என்று.

ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

குறைந்த அளவு அம்சங்களை கொண்ட சாதனங்களில் இதுபோன்ற பெரிய அளவிலான பேட்டரி பொருத்தப்படும்பட்சத்தில் அது நீடித்த ஆயுளை வழங்கும் என்பது நிச்சயம்.

இந்த ஸ்மார்ட்போன் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் சார்ஜ் செய்யலாம்.

புதிய Honor போனின் விலை

புதிய Honor போனின் விலை

ஹானர் எக்ஸ்6 ஸ்மார்ட்போன் தற்போது சவூதி அரேபிய சந்தையில் மட்டுமே கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் மிட்னைட் பிளாக், ஓஷன் ப்ளூ மற்றும் டைட்டானியம் சில்வர் என மூன்று வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனின் உலகளாவிய கிடைக்கும் தன்மை மற்றும் விலையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

விலை இதுவாக இருக்கலாம்

இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்த தகவல் சரியாகத் தெரியவில்லை.

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதை இதன் அம்சங்கள் மூலம் உறுதிப்படுத்தலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ரூ.15000க்கு கீழ் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது.

ஹானர் எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன்

ஹானர் எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போன்

ஹானர் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு ஹானர் எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480+ எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் 48 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

22.5 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனானது மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ வண்ண விருப்பங்களில் வெளியானது.

இதில் 6.5 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. பஞ்ச் ஹோல் வடிவமைப்புடன் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

Honor X8 5G ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

48 எம்பி பிரதான கேமரா

48 எம்பி பிரதான கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் இருக்கிறது.

அதேபோல் செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி ஷூட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான மேஜிக் யுஐ 402 மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனும் சீனாவில் மட்டுமே அறிமுகமானது. சர்வதேச அளவில் கிடைக்கும் தன்மையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Honor Launched its Honor X6 Smartphone at Budget Price: Specs, Availability

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X