ஹானர் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.!

By Prakash
|

ஹவாய் நிறுவனத்தின் சப்-பிராண்ட் ஹானர் இந்த ஆண்டு இறுதியில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, அதன்படி இந்திய மொபைல் சந்தையில் ஹவாய் ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஹானர் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.!

புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்விற்கு ஊடக அழைப்பிதழ்களை அனுப்பி வைத்துள்ளது ஹானர் நிறுவனம். அதன்படி டிசம்பர் -13 நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிகழ்ச்சியில் கண்டிப்பாக புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஹவாய் நிறுவனம் கடந்த வாரம் ஹானர் 7எக்ஸ் மற்றும் ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை லண்டனில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில்
அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களளை கொண்டுள்ளது.

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 12,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஹானர் 7எக்ஸ் ஆனது 2160-1080 (முழு எச்டி ப்ளஸ் ) என்கிற தீர்மானம் கொண்ட மற்றும் 18: 9 என்கிற விகிதத்திலான 5.9 அங்குல டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் குறைந்த முன்பக்க பெஸல்கள் ஒரு வழக்கமான 5.5 இன்ச் டிஸ்பிளேவை, 5.9 இன்ச் டிஸ்ப்ளேவாக வடிவ மாற்றம் செய்துள்ளது.

ஹானர் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.!

ஹானர் 7எக்ஸ் அதன் விலையை மீறிய மிகவும் சக்தி வாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்த ஹைசிலிகான் கிரின் 659 சிப்செட் உடனான 4ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. மற்றும் நிறுவனத்தின் கூற்றுப்படி 12 மணி நேர வீடியோ பின்னணி மற்றும் 91 மணி இசை பின்னணியை வழங்கும் ஒரு 3340எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயக்கப்படுகிறது.

ஹானர் 7எக்ஸ் ஆனது 4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மற்றும் க்ளோநாஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. யூஎஸ்பி-க்குப் பதிலாக சார்ஜ் செய்ய மற்றும் தரவு பரிமாற்றத்திற்கான ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் இருப்பது ஒரு பெரிய பின்னடைவாகும்.

Best Mobiles in India

English summary
Honor to launch a new smartphone on December 13 Starts sending out media invites ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X