3ஜிபி ரேம்; 13எம்பி கேம் உடன் ரூ.11,999/-க்கு ஹானர் ஹோலி 4 அறிமுகம்.!

இன்று தொடங்கி இந்தியா முழுவதுமுல்லா ஹானர் பங்குதாரர் கடைகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.

|

ஹூவாய் நிறுவனத்தின் டெர்மினல் பிராண்டான ஹானர், இந்தியாவில் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹானர் ஹோலி 4 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சங்களாக, அதன் மெட்டல் வடிவமைப்பு, கைரேகை சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் கேமரா ஆகியவைகள் திகழ்கின்றன.

3ஜிபி ரேம்; 13எம்பி கேம் உடன் ரூ.11,999/-க்கு ஹானர் ஹோலி 4 அறிமுகம்.!

இது தவிர ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான இஎம்யூஐ 5.1 கொண்டு இயங்கும் இக்கருவி இன்று தொடங்கி இந்தியா முழுவதுமுல்லா ஹானர் பங்குதாரர் கடைகளில் வாங்குவதற்கு கிடைக்கும். இந்தியாவில் ஹானர் ஹோலி 4 ஆனது ரூ.11,999/- என்ற மதிப்பை பெற்றுள்ளது. தங்கம், சாம்பல் மற்றும் சில்வர் நிற வகைகளில் கிடைக்கும் இந்த சாதனம் இயர்போன், சார்ஜர் மற்றும் டேட்டா கேபிள் கொண்டு பேக் செய்யப்பட்டுள்ளது.

டூயல் சிம் ஆதரவு கொண்ட ஹானர் ஹோலி 4 கருவியானது, முன்னர் குறிப்பிட்டபடி ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த இஎம்யூஐ 5.1 இயக்க முறைமை கொண்டு இயங்குகிறது. 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ள இக்கருவி ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி உடனான 3 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகின்றது.

கேமராத்துறையை பொறுத்தமட்டில், செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா தவிர, இரட்டை-எல்இடி ஃபிளாஷ் மற்றும் பிடிஏஎப் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா ஒன்றும் கொண்டுள்ளது.
மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக (128 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய ஆதரவை வழங்கும் ஹானர் ஹோலி 4 ஆனது 32 ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு, கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி4.1, மைக்ரோ-யூஎஸ்பி, ஓடிஜி ஆகியவைகள் அடங்கும்.

மேலும் இதன் போர்டில் - அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் மற்றும் ப்ராக்சிமிட்டி ஆகிய சென்சர்களும் இடம்பெறுகின்றன. அளவீட்டில் 143.7x70.95x8.2 மிமீ மற்றும் 144 கிராம் எடையைக் கொண்ட இந்த சாதனம் 3020எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Honor Holly 4 With 13-Megapixel Camera Launched in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X