Home
Mobile

இதுக்கு மேல என்ன வேணும்.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. வருகிறது புது Honor 5ஜி போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் ஜிடி2 (Honor GT2) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. முதலில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு உலக சந்தையில் அறிமுகமாகும். இந்நிலையில் ஹானர் ஜிடி2 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் ஜிடி2 அம்சங்கள் (Honor GT2 Specifications): தற்போது வெளியான தகவலின்படி, ஹானர் ஜிடி2 ஸ்மார்ட்போன் ஆனது 9000mAh பேட்டரி உடன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.

இதுக்கு மேல என்ன வேணும்.. 9000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பேட்டரி பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் (Qualcomm's Snapdragon 8 Gen 5 processor) உடன் ஹானர் ஜிடி2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே (1.5K OLED display) வசதியுடன் ஹானர் ஜிடி2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் ( 120Hz refresh rate), 45000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது.

24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி உடன் ஹானர் ஜிடி2 ஸ்மார்ட்போன் வெளியாகும். அதேபோல் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஹானர் ஜிடி2 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனில் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் ரூ வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஹானர் ஜிடி2 மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. மேலும் ஹானர் ஜிடி2 போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor GT2 to be launched soon with 9000mAh battery: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X