வெச்சி செஞ்சிட்டாங்க.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 7200mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, 50X ஜூமிங் கொண்ட 200 எம்பி டெலிபோட்டோ கோமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7200mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ஹானர் ஜிடி ப்ரோ (HONOR GT Pro) போன் களமிறங்கி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் லீடிங் எடிஷன் சிப்செட் கொண்ட இந்த ஹானர் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கேமிங் பிரியர்களுக்கான மாடலாக இந்த ஹானர் ஜிடி ப்ரோ வெளியாகி இருக்கிறது. ஏனென்றால், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2700Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளேவில் தொடங்கி லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஹானர் சி1பிளஸ் (HONOR C1+) கேமிங் சிப் வரையில் கேமிங் பீச்சர்களிலேயே கவனம் செலுத்தி இருக்கிறது. முழு பீச்சர்கள் எப்படி?

ஹானர் ஜிடி ப்ரோ அம்சங்கள் (HONOR GT Pro Specifications): இந்த ஹானர் போனில் 6.78 இன்ச் (1264 x 2800 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஹானர் ஜெயண்ட் ரைனோ கிளாஸ் (Honor Giant Rhino Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது.
மேலும், 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15) பேஸ்டு மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஹானர் சி1பிளஸ் கேமிங் சிப்செட் மற்றும் ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் எலைட் லீடிங் எடிஷன் (Octa Core 3nm Snapdragon 8 Elite Leading Edition) சிப்செட் உள்ளது.

ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 20 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 3X ஆப்டிகல் ஜூம், 50X டிஜிட்டல் ஜூம் மற்றும் 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி உள்ளது.
மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கிடைக்கிறது. பிரீமியம் போன்களில் கிடைக்கும் IP68 ரேட்டிங் + IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் இந்த ஹானர் போனிலும் கிடைக்கிறது. 7200mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஹானர் சரவுண்ட் சவுண்ட் சப்வூப்பர் (Honor Surround Subwoofer) உள்ளது.
குளோரி பாண்டம் என்ஜின் (Glory Phantom Engine) கிடைக்கிறது. இந்த என்ஜின் மூலம் ஏஐ டச் என்ஹான்ஸ்மெண்ட் 2.0, ஏஐ இமேஜ் குவாலிட்டி என்ஜின் 2.0 போன்ற கேமிங் அவுட்புட் கிடைக்கிறது. அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சப்போர்ட் கிடைக்கிறது. ஐஸ் கிரிஸ்டல் ஒயிட் (Ice Crystal White), பாண்டம் பிளாக் (Phantom Black), பர்னிங் ஸ்பீடு கோல்டு (Burning Speed Gold) கலர்கள் உள்ளன.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.43,211ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ரூ.46,716ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.50,211ஆகவும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ரூ.56,051ஆகவும் இருக்கிறது. இந்த விலைகள் சீன யுவானின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications