Home
Mobile

சம்பவம் செய்யப்போகும் Honor.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய போன்.. எந்த மாடல்?

ஹானர் (Honor) நிறுவனம் தனது புதிய ஹானர் ஜிடி ப்ரோ (Honor GT Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஹானர் ஜிடி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சம்பவம் செய்யப்போகும் Honor.. வருகிறது புதிய போன்.. எந்த மாடல்?

ஹானர் ஜிடி ப்ரோ அம்சங்கள் (Honor GT Pro Specifications): 6.78-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஹானர் ஜிடி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution),120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட்(Qualcomm Snapdragon 8 Elite chipset) உடன் இந்த புதிய ஹானர் ஜிடி ப்ரோ அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஹானர் ஜிடி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி ஹானர் ஜிடி ப்ரோ ஸ்மார்ட்போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அட்ரினோ 750 ஜிபியு(Adreno 750 GPU) கிராபிக்ஸ் யூனிட் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். அதேபோல் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

6000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஹானர் ஜிடி ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே சில நிமடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் போனில் உள்ளன. குறிப்பாக ஹானர் ஜிடி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Honor GT Pro full specifications and images leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X