Home
Mobile

சீனாக்காரன் மூக்குமேல விறல் வச்சுட்டான்.. புது HONOR GT விலை மற்றும் சிறப்பம்சம்.. விற்பனை தேதி இதான்..

ஹானர் (Honor) நிறுவனம் அதன் புதிய சக்தி வாய்ந்த பட்ஜெட் கேமிங் ஸ்மார்ட்போன் சாதனமான ஹானர் ஜிடி (Honor GT) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹானர் GT ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் பல வியக்கத்தகு அம்சங்களுடன் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இது முதல் முறையாக ஸ்மார்ட்போன் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் பல அட்டகாசமான AI அம்சங்களை அடக்கியுள்ளது. புதிய HONOR GT ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விபரங்களை பார்க்கலாம்.

ஹானர் பிராண்ட் இந்த புதிய ஹானர் ஜிடி ஸ்மார்ட்போன் சாதனத்தை முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய போனில் இருக்கும் அம்சங்களை பார்த்து சீனக்காரர்களே வியந்து, மூக்குமேல் விறல் வைத்துவிட்டார்கள் என்றால் பாருங்களேன். அப்படி இந்த புதிய ஹானர் GT (HONOR GT) ஸ்மார்ட்போனில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சீனாக்காரன் மூக்குமேல விறல் வச்சுட்டான்.. புது HONOR GT விலை..

ஹானர் ஜிடி சிறப்பம்சம் (HONOR GT Specifications):
HONOR GT ஸ்மார்ட்போன் சாதனத்தின் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், இந்த டிவைஸ் 6.7" இன்ச் அளவு கொண்ட 2664 x 1200 பிக்சல் கொண்ட FHD+ OLED டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் ட்ரூ 1.07 பில்லியன் கலர் (billion colors), DCI-P3 wide color gamut தொழில்நுட்பம், 400 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (peak brightness) போன்றவற்றை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) உடன் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) அம்சத்தை கொண்டுள்ளது. இந்த Honor GT ஸ்மார்ட்போன் சாதனம் 12GB மற்றும் 16GB ரேம் (RAM) உடன் 256GB, 512GB மற்றும் 1TB ஸ்டோரேஜ் (storage) மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் ஜிடி விலை இந்திய மதிப்பில் எவ்வளவு? (HONOR GT price in India):

இந்த போன் ஆண்ட்ராய்டு 15 உடன் மேஜிக் யுஐ 9.0 (Android 15-based Magic UI 9.0) இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த சாதனம் 50MP + 12MP ரியர் கேமராவுடன் முன்பக்கத்தில் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உடன் 5G SA/NSA, டூயல் 4G VoLTE, வைஃபை 802.11ax (2.4GHz/5GHz), ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் (GPS), USB Type-C போன்றவற்றை கொண்டுள்ளது.

HONOR GT ஸ்மார்ட்போன் 5300mAh பேட்டரி (battery) உடன் 100W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperCharge fast charging) அம்சத்துடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில்,
- HONOR GT 12GB+256GB மாடல் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 25,630
- HONOR GT 16GB+256GB மாடல் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 27,960
- HONOR GT 12GB+512GB மாடல் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 30,295
- HONOR GT 16GB+512GB மாடல் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 33,790
- HONOR GT 16GB+1TB மாடல் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 38,450

இந்த ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 24ம் தேதி முதல் அசீனாவில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR GT launched check price specifications and sale date announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X