Home
Mobile

மொத்தமா மிரளப் போகுது.. 9000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனத்தில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாகவும் ஹானர் ஜிடி 2 (Honor GT 2) இருக்கப்போகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி, சிப்செட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. முந்தைய வெர்ஷனில் 7200mAh பேட்டரி கிடைத்தது. ஆனால், இதில் 9000mAh பேட்டரி கிடைக்க இருப்பது தெரிகிறது. இந்த ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், வெளியீடு மற்றும் பட்ஜெட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஹானர் ஜிடி 2 சீரிஸ் (Honor GT 2 Series) மாடல்கள் வருகிற டிசம்பர் மாதத்தில் சீன மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஹானர் ஜிடி 2 மற்றும் ஹானர் ஜிடி 2 ப்ரோ ஆகிய மாடல்கள் இருக்கின்றன. இந்த மாடல்களின் சிப்செட், பேட்டரி பீச்சர்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) மூலமாக கசிந்துள்ளது.

மொத்தமா மிரளப் போகுது.. 9000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா!

இந்த பீச்சர்கள் பர்ஃபாமென்ஸ் மற்றும் பேக்கப் கொண்ட மாடல்களாக இந்த சீரிஸ் இருப்பதை உறுதி செய்கிறது. ஏனென்றால், ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி (Snapdragon 8 Elite SoC) கிடைக்க இருக்கிறது. அதேபோல ஹானர் ஜிடி 2 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) கிடைக்க இருக்கிறது.

6.83 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கொடுக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த மாடல்களில் 9000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இருப்பினும், எந்த மாடலில் என்பது உறுதியாகவில்லை. ஆனால், இந்த ஹானர் ஜிடி 2 சீரிஸில் 9000mAh பேட்டரி கிடைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகும்.

மேலும், 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic Fingerprint Sensor) கிடைக்க இருக்கிறது. இதுபோக ஃபுல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடல்களாக இருக்க போகின்றன. ஆகவே, IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் எதிர்பார்க்கலாம். இதற்கு முன்னதாக வெளியான ஹானர் ஜிடி சீரிஸ் மாடல்ளை பார்க்கலாம்.

ஏனென்றால், இந்த மாடல்களில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களிலே ஹானர் ஜிடி 2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருக்கும். இதிலும் ஹானர் ஜிடி (Honor GT) மற்றும் ஹானர் ஜிடி ப்ரோ (Honor GT Pro) என்று 2 மாடல்கள் இருக்கின்றன. இதில் ப்ரோ மாடலில் அதிக பேட்டரி கேபாசிட்டி கிடைக்கிறது. ஹானர் ஜிடி நர்மலான பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது.

ஹானர் ஜிடி சீரிஸ் அம்சங்கள் (Honor GT Series Specifications): ஹானர் ஜிடி ஸ்மார்ட்போனில் 5300mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

ப்ரோ மாடலில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 7200mAh பேட்டரி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 200 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ உள்ளது. 6.78 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. சீனாவில் இதன் ஆரம்ப விலை ரூ.43,250ஆக இருக்கிறது. ஜிடி போனின் ஆரம்ப விலை ரூ.25,630ஆக இருக்கிறது. இதைவிட கூடுதல் விலைக்கு ஜிடி 2 சீரிஸ் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor GT 2 GT 2 Pro With 9000mAh Battery Snapdragon 8 Elite Gen 5 Tipped Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X