மிரண்டு போன மார்க்கெட்.. 8800mAh.. 24ஜிபி ரேம்.. வருகிறது புதிய Honor 5ஜி போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் ஜிடி 2 (Honor GT 2) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஹானர் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஹானர் ஜிடி 2 அம்சங்கள் (Honor GT 2 Specifications): 6.7-இன்ச் ஒஎல்இடி எல்டிபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 (Snapdragon 8 Elite Gen 2) சிப்செட் உடன் ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளது. அதேபோல் ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
50எம்பி டூயல் ரியர் கேமராக்கள் உடன் ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளதாக கூறப்படுகிறது.
IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதுவும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) வசதி இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது.
8800mAh பேட்டரி உடன் ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








