என்னது ரூ.20,000 டிஸ்கவுண்ட்-ஆ! விட்றா வண்டிய.. 4 லேட்டஸ்ட் HONOR போன்கள் மீது பலே தள்ளுபடி! Amazon-ஏ அதிருது!
Honor Days Sale: பரபரப்பான 2024 சுந்தந்திர தின சிறப்பு விற்பனையை முடித்த கையோடு அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது.. சந்தமில்லாமல் இன்னொரு சிறப்பு விற்பனையை நடந்தி வருகிறது. இது ஹனார் ஸ்மார்ட்போன்களுக்கான பிரத்யேக விற்பனை ஆகும். இதன்கீழ் மிகவும் சமீபத்தில் அறிமுகமான 4 ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.20,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது. ஹானர் டேஸ் என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த விற்பனை எப்போது முடியவடையும்? இதன்கீழ் என்னென்ன மாடல்கள் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
01. ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி (Honor Magic 6 Pro 5G): ஹானர் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.89,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும். இது மிகவும் சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போனாகும்; இதன் முதல் விற்பனையே நாளை (ஆகஸ்ட் 23) மதியம் 12 மணிக்கு தான் தொடங்குகிறது.

02. ஹானர் 200 5ஜி (Honor 200 5G): அமேசானில் நடக்கும் ஹானர் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.39,999 க்கு பதிலாக ரூ.31,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும். இந்த டிஸ்கவுண்ட் ஆகஸ்ட் 29 வரை அணுக கிடைக்கும்.
03. ஹானர் 200 ப்ரோ 5ஜி (Honor 200 Pro 5G): அமேசானில் நடக்கும் ஹானர் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.59,999 க்கு பதிலாக ரூ.49,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும்.

04. ஹானர் எக்ஸ்8பி 5ஜி (Honor X9b 5G): கடைசியாக, அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் ஹானர் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.30,999 க்கு பதிலாக வெறும் ரூ.19,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும்.
ஹானர் 200 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்: ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் ஓஎல்இடி OLED கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது, அதே சமயம் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்று பெரிய 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் உள்ளது. மேலும் இரண்டுமே ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 8.0 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) உடன் அனுப்பப்படுகின்றன.
கேமராக்களை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியாத் கேமராவுடன், அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஆனால் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் சோனி ஐஎம்எக்ஸ் 906 ப்ரைமரி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, ப்ரோ மாடலில் எச்9000 ப்ரைமரி சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராக்களை கொண்டுள்ளன. ஆனால் ப்ரோ வேரியண்டில் செல்பீ கேமராவுடன் கூடுதலாக 3டி டெப்த் கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன. ஆனால் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 66W வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் செய்வதற்கான ஆதரவு உள்ளது.


Click it and Unblock the Notifications








