பிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஹானர் 9ஐ மற்றும் ஹானர் 10 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999 மற்றும் ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஹானர் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது, இந்நிலையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் வலைதளத்தில் விலைகுறைக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த
சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை குறைப்பு சலுகை நாளை முதல் வரும் டிசம்பர் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் உடனடி தள்ளுபடி வழங்கப்படும்
என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 9என்:
ஹானர் 9என்(32ஜிபி) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படும், பின்பு ஹானர் 9என்(64ஜிபி) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படும்

ஹானர் 7ஏ:
ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் வலைதளத்தில் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

ஹானர் 7எஸ்:
ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் வலைதளத்தில் விலைகுறைக்கப்பட்டு ரூ.5999-விலையில் விற்பனை செய்யப்படும். அதேபோன்று ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 9ஐ மற்றும் ஹானர் 10:
ஹானர் 9ஐ மற்றும் ஹானர் 10 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999 மற்றும் ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications