அதிரிபுதிரி மாடல்.. டிசைனுக்கே காசு கொடுப்பீங்க.. 108 எம்பி கேமரா! கர்வ்ட் OLED டிஸ்பிளே! எந்த மாடல்?
இந்திய மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்ட வந்த ஹானர் நிறுவனம், இப்போது ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறதா? இல்லையா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு எந்த புது போன்களையும் அறிமுகப்படுத்தாமல் பல ஆண்டுகளை கடந்துவிட்டது. இருப்பினும், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஆனால், இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே, பிரம்மாண்ட அம்சங்களுடன் புதுப்புது மாடல்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு, அசத்தி வருகிறது. முன்னதாக, ஹானர் 90 சீரிஸ் மாடல்களான ஹானர் 90 (HONOR 90) மற்றும் ஹானர் 90 ப்ரே (HONOR 90 Pro) போன்களுடன் உலகம் முழுவதும் மீண்டும் களமிறங்க இருப்பதை அறிவித்திருந்தது.

இந்த போன்களின் அம்சங்களே அதிரிபுதிரியாக இருக்கும் வேளையில், இப்போது ஹானர் எக்ஸ் 50 (HONOR X50) போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போனின் கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே, 108 எம்பி கேமராவே பிரம்மாண்டமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், மற்ற அம்சங்களும் வேற லெவலில் இருக்கிறது. இந்த போன் எப்போது வெளியாகும், என்ன விலைக்கு விற்பனையாகும் உள்ளிட்ட தகவல்கள் பின்வருமாறு.
ஹானர் எக்ஸ் 50 அம்சங்கள் (HONOR X50 Specification): இந்த ஹானர் போன் 6.78 இன்ச் ( 2652*1200 பிக்சல்ஸ்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு கர்வ்ட் ஓஎல்இடி (Curved OLED)டிஸ்பிளேவாகும். இதில், 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor) வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு மேஜிக் யுஐ (Magic UI) வருகிறது.
16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது. 5,700mAh பேட்டரி வருகிறது. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், 35W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
டூயல் கேமரா (Dual-Camera) செட்டப்பை கொண்டுள்ளது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த போன் மிட்-ரேன்ஞ் விலையில் வெளியாக இருக்கிறது. ரூ.30 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரையில் விலை நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த போன் ஜூலை 5ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக, ஹானர் நிறுவனம் தனது 200MP மெயில் கேமரா, டூயல் செல்பீ கேமரா, (பிடபுள்யூஎம்) PWM டெக்னாலஜி உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களுடன் கூடிய ஹானர் 90 சீரிஸ் (HONOR 90 Series) போன்கள் ஜூலை 6ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்த நேரத்தில், ஹானர் எக்ஸ் 50 போனை அதற்கு முன்னதாகவே வெளியிட உள்ளது. இந்த மாடல்கள் அடுதடுத்த மாதங்களில், இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








