Home
Mobile

என்னது.. கண்களை வச்சி ஸ்மார்ட்போனை கண்ட்ரோல் பண்ணலாமா.. மிரட்டிவிட்ட Honor.. என்ன மாடல்?

குவால்காமின் (Qualcomm) லேட்டஸ்ட் சிப்செட் ஆக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 8 Gen 3 SoC) அறிமுகமான வேகத்தில் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் இந்த புதிய ப்ராசஸர் உடன் அறிமுகமாகும் என்கிற அறிவிப்புகள் அனல் பறக்கின்றன. இந்த சிப்செட்டுடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன்கள் என்கிற பெயரை ஷாவ்மீ 14 சீரீஸ் (Xiaomi 14 Series) மாடல்கள் தட்டிப்பறித்துவிட்டன.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகம் முதல் ஸ்மார்ட்போன்களாக ஐக்யூ 12 சீரீஸ் (iQOO 12 Series) இருக்கும் என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹானர் நிறுவனமும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. ஹானர் பிராண்டின் எந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் இடம்பெறும்? அது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

கண்களை வச்சி ஸ்மார்ட்போனை கண்ட்ரோல் பண்ணலாமா.. என்ன மாடல்?

ஹானர் நிறுவனம் அதன் ஹானர் மேஜிக் 6 (Honor Magic 6) ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போன் ஆனது மேஜிக் கேப்சூல் (Magic Capsule) எனப்படும் ஐ ட்ராக்கிங் (Eye Tracking) தொடர்பான ஒரு முக்கிய அம்சம் இடம்பெறும்.

மேஜிக் கேப்சூல் என்பது பயனர்கள் தங்கள் கண்களை பயன்படுத்தி ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போனை "தொடர்பு கொள்ள" (Interact) அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஒரு ஆப்பை திறக்க அல்லது சரியான இடத்தில் உற்றுப் பார்ப்பதன் மூலம் டிஸ்பிளேவில் உள்ள கன்டென்ட் உடன் ஈடுபட அனுமதிக்கும். பார்ப்பதற்கு இந்த அம்சம் ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட்டை (Apple Dynamic Island) போலவே தோற்றமளிக்கிறது.

கண்களை வச்சி ஸ்மார்ட்போனை கண்ட்ரோல் பண்ணலாமா.. என்ன மாடல்?

இந்த தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்பதற்கான டெமோ வீடியோ (Demo Video) ஒன்றையம் ஹானர் நிறுவும் பகிர்ந்துள்ளது. அதில் ஒரு பெண், ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போனை தனது கையில் பிடித்துக்கொண்டு மேஜிக் கேப்சூலை பார்ப்பதன் அதை அணுகுகிறார். அவர் பார்வையை பயன்படுத்தியே ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவை பயன்படுத்துகிறார்.

இருப்பினும் ஹூவாய் (Huawei) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் அதன் மேஜிக் 6ஸ் ஸ்மார்ட்போனை சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற தேதியை (Launch Date) இன்னும் வெளிப்படுத்தவில்லை. பெரும்பாலும் இது ஹானர் மேஜிக் 5 சீரீஸை (Honor Magic 5 Series) போலவே 2024 முதல் காலாண்டில் வரக்கூடும்.

மேலும், ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு லார்ஜ் லேங்குவேஜ் மாடல் (Large language model - LLM) மூலம் இயக்கப்படும் ஆன்போர்ட் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Onboard artificial intelligence) உடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போனில் எக்கச்சக்கமான ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள் இடம்பெறும்.

கண்களை வச்சி ஸ்மார்ட்போனை கண்ட்ரோல் பண்ணலாமா.. என்ன மாடல்?

இதுதவிர்த்து ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போன் பற்றிய வேறு எந்த தகவல்களும் வெளிப்டுத்தப்படவில்லை. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஹானர் மேஜிக் 5 (Honor Magic 5) மற்றும் ஹானர் மேஜிக் 5 ப்ரோ (Honor Magic 5 Pro) ஆகிய இரண்டும் கடந்த பிப்ரவரியில் அறிமுகமாகின; இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) உள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் அறிமுகமான முதல் ஷாவ்மீ 14 சீரிஸின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஷாவ்மீ 14 ப்ரோவின் (Xiaomi 14 Pro) பேஸிக் வேரியண்ட், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,500 க்கும், ஷாவ்மீ 14 (Xiaomi 14) ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் தோராயமாக ரூ.50,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Confirmed Eye Tracking Feature Snapdragon 8 Gen 3 SoC in Honor Magic 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X